பைக் வாங்க மாமனார் இடம் பணம் வாங்கி வரச் சொல்லி மனைவியை துன்புறுத்திய கணவன் கோவம் அடைந்து தந்தை வீட்டுக்கு சென்ற மனைவி


மாமனார் வீட்டுக்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாமனாரை  அரிவாளல் வெட்டிய மருமகன் கோவில்பட்டியில் அரங்கேறிய பயங்கரம்.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள தெற்கு திட்டம் குளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ்( 50) இவர் லோடுமேன் ஆக வேலை பார்த்து வருகிறார் .இவருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். இவரது மூத்த மகள் சினேகாவை பாரதி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மகன் முத்துக்குமார் என்பவருக்கும் சிநேகவிற்கும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது முத்துக்குமார் வேலைக்குச் செல்லாமல் மது அருந்திவிட்டு தினந்தோறும் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.மேலும் தனக்கு பைக் வாங்க பணம் வேண்டும் என்றும் அதை உன் அப்பாவிடம் வாங்கி வர சொல்லி அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இது தொடர்பாக சினேகாவின் தந்தை நாகராஜ் கோவில்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் அடிப்படையில் காவல் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டு பிணையில் போலீசார் அனுப்பி வைத்த நிலையில்  தனது மாமனார் வீட்டுக்கு சென்ற முத்துக்குமார் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.




இருவருக்கும் வாக்குவாதம் முற்றவே முத்துக்குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து மாமனார் கழுத்தில் வெட்டினார்.ரத்த வெள்ளத்தில் கிடந்த நாகராஜன் உடனடியாக அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.




இந்நிலையில் முத்துக்குமார் போலீசாருக்கு பயந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.உடனடியாக அவரையும் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்போது அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


பைக் வாங்குவதற்கு மாமனார் பணம் வாங்கி வர சொல்லி மனைவியை கொடுமைப்படுத்தியும் மாமனாரையும் வெட்டிய மருமகன் செயல் கோவில்பட்டி பகுதிகளில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது