பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி உயிரிழப்பு.
ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு பணிக்காக சென்ற காவலர் லாரி மோதி விபத்தில் உயிரிழந்தார்.
இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவலருக்கு வலது கால் மற்றும் உடல்களில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்த பொதுமக்கள் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காவலரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் கொண்டு செல்லும் வழியிலேயே சிகிச்சை பலனின்றி காவலர் உயிரிழந்துள்ளார். பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பவ இடத்தில் அரவக்குறிச்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பைக் மோதிய விபத்தில் ஒருவர் பலி
நொய்யல், அருகே நாடார் புரம் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் நொய்யல் பகுதியில் இருந்து வேலாயுதம்பாளையம் நோக்கி சாலையின் ஓரமாக வந்து கொண்டிருந்தார். அப்போது முத்தனூர் வெள்ளக்கல் மேடு அருகே, வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக நின்று கொண்டிருந்த ஒருவர் சாலையின் குறுக்கே திடீரென வந்ததால் மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த குமார் மற்றும் குறுக்கே வந்தவருக்கும் தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குமார் மற்றும் விபத்தில் சிக்கியவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்தில் சிக்கிய வரை மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குறுக்கே நடந்து வந்த போது விபத்துக்குள்ளான ஊட்டி உமர் கட்டேஜ் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
மதுவிற்ற 14 பேர் கைது.
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விட்டதாக 14 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் எஸ்ஐ அலகு ராம் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் வாங்கல், வேலாயுதம்பாளையம், சின்ன தாராபுரம், வெங்கமேடு, தான்தோன்றி மலை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சட்டவிரோதமாக மதுபானம் விற்றதாக சண்முகம், திலகவதி, ராஜ் கண்ணு, குழந்தைமணி, வெள்ளைப்பதேவன், முருகேசன், லோகநாதன், சடையன், குமார், மகேஸ்வரி, ஜீவா, சுப்ரமணியன், மலர்விழி, ஆகிய 14 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்தும் 90 மதிப்பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.