கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்தனர்.


கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாநகர காவல் துறை ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் அடிப்படையில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு போதை வஸ்துகள் குறித்த தீவிர தேர்தல் வேட்டை நடத்தப்பட்டு வருகின்றது. தனிப்படை காவல் துறையினர் போதைக்கு பயன்படுத்த மாத்திரைகளை பறிமுதல் செய்து வருவதோடு, அதனை விற்பனை செய்பவர்களை கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பெரியகடை வீதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


அப்போது வைசால் வீதி அருகே ஒரு பகுதியில் வாலிபர் ஒருவர் போதை பொருள் மாத்திரைகளை வைத்து இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த வாலிபரை பிடித்தனர். அவரை பிடித்து விசாரித்த போது டெரஸ் ஷெட் அமைக்கும் கூலி தொழிலாளியான நவ்சாத் என்ற நபரே இந்த போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் நவ்சாத்திடமிருந்து 46 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்திருக்கின்றனர். மேலும் போதைக்காக இந்த மாத்திரைகளை கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்துவதாக விசாரணையில் தெரியவந்தது.


இதையடுத்து நவ்சாத் மீது வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். போதை மாத்திரை  புழக்கத்தை தடுக்க தனிப்படை காவல் துறையினர் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் இது போன்ற நபர்கள் மீது குண்டர் சட்டம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண