தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு 2003-ம் ஆண்டு முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி கள்ளத்தனமாக லாட்டரியை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை ஒட்டியுள்ள பிற மாநிலங்களில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கேரளாவில் லாட்டரி விற்பனை சட்டப்பூர்வமானதாக இருக்கிறது. கேரளாவுக்கு செல்லும் லாரி ஓட்டுநர்கள் அல்லது பிற வேலைகளுக்காக செல்பவர்கள் அங்கு விற்பனையாகும் லாட்டரிகளை வாங்கி வருவார்கள்.இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாள்களாக வெளிமாநில லாட்டரி சீட்டுகள் கள்ளத்தனமாக அதிகளவில் விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சென்னை மற்றும் திருச்சியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை கள்ளத்தனமாக விற்பனை செய்த நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். இதேபோல் புதுக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து போலீஸார் அப்பகுதிகளில் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து திருச்சி மத்திய மண்டலத்தில் லாட்டரி சீட்டு விற்பனை அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக காவல்துறைக்கு புகார் மனுக்களை சமூக ஆர்வலர்கள் அனுப்பினர். இதனை தொடர்ந்து மத்திய மண்டலங்களில் காவல்துறையினர் லாட்டரி சீட்டு விற்பனையை முற்றிலும் ஒழிக்கவேண்டும் என தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்