மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவான பரோட்டா மாஸ்டரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்தனர்.


சித்த மருத்துவர் கொலை


சென்னை தி.நகர் ராகவைய்யா சாலையை சேர்ந்தவர் 67 வயதாகும் மலர்கொடி. சித்த வைத்திய மருத்துவரான இவர், தனது சகோதரர் ஆனந்த் குமாருடன் வசித்து வந்துள்ளார். கடந்த 21.5.2002ல் வீட்டில் மர்மமான முறையில் மலர்கொடி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதைதொடர்ந்து போலீசார் அப்போது அழகர் சாமி மற்றும் அவரது நண்பர் சக்திவேலை கைது செய்தனர். ஆனால் இந்த வழக்கில் ராம கிருஷ்ணன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். போலீசார் ராமகிருஷ்ணனை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தவரை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.



பாஸ்ட் புட் கடை


இதற்கிடையே ராமகிருஷ்ணன் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கொல்லம்பட்டி பகுதியில் 'பாஸ்ட் புட்' கடை நடத்தி வருவதாக கமிஷனர் பிரகாஷ் குமாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பாண்டிபஜார் இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் ராமகிருஷ்ணனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


ஏன் கொலை செய்தார்?


சித்த மருத்தவர் மலர்கொடி வீட்டில் ராமகிருஷ்ணனின் சகோதரர் அழகர் சாமி வேலை செய்து வந்தார். அப்போது அவரை பார்க்க மலர்கொடி வீட்டிற்கு ராமகிருஷ்ணன் சென்றுள்ளார். தனது சகோதரர் ஆனந்தகுமாருடன் அந்த சித்த மருத்துவர் தனியாக வசித்து வருவது தெரிய வந்தது. அவரிடம் அதிகளவில் பணம் நடமாட்டம் இருந்ததை ராமகிருஷ்ணன் கவனித்துள்ளார். பிறகு தனது சகோதரர் அழகர்சாமி மற்றும் நண்பர் சக்திவேலுடன் சேர்ந்து திட்டமிட்டு சித்த மருத்துவரை கொலை செய்து நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்றுள்ளனர். 



புரோட்டா மாஸ்டர்


இந்த சம்பவத்தில் அழகர் சாமியையும், சக்திவேலையும் கைது செய்த போலீசாரிடம் இருந்து தப்பிய ராமகிருஷ்ணன் கேரளாவுக்கு சென்று ரோட்டு கடையில் வேலைக்கு சேர்ந்து, புரோட்டா மாஸ்டராக மாறியுள்ளார். அங்கேயே ஒரு பெண்ணை மணந்து, இரு குழந்தைகள் என நிம்மதியாக குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். தலைமறைவாக இருந்தாலும் தங்களது உறவினர்களுடன் தொடர்பில்தான் இருந்து வந்துள்ளார். அதன் பின்னர் கொலை செய்து 20 ஆண்டுகள் ஆகி விட்டது, இன்னமும் போலீசார் தேட வாய்ப்பில்லை என நினைத்து சொந்த ஊருக்கு வந்து பாஸ்ட் புட் கடை வைத்து நடத்தி இருக்கிறார். இதன் பின்னர் தேனாம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவரை தனிப்படை அமைத்து கைது செய்துள்ளனர்.


விசாரணை


பின்னர் ராமகிருஷ்ணனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது, "போலீஸ் தேடுவதை நிறுத்தி இருப்பார்கள், இனியும் நீ கேரளாவில் தலைமறை வாக வாழ வேண்டுமா, உனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு வா என உறவினர்கள் கூறியுள்ளனர். உறவினர்கள் கூறியதை நம்பி, ராமகிருஷ்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டிக்கு வந்துள்ளார். பிறகு கொல்லம்பட்டியிலேயே புதிதாக 'பாஸ்ட் புட்' உணவகம் தொடங்கி சிறப்பாக நடத்தி வந்துள்ளார். கைது செய்யப் பட்டு தற்போது ஜாமீனில் உள்ள அழகர்சாமியிடம், போலீசார் நீதிமன்றத்தில் வழக்கு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது தொடர்பாக விசாரணை நடத்திய போது, தனது சகோதரர் சொந்த ஊரில் இருப்பதாக உளறி இருக்கிறார். அதனை தொடர்ந்து தேடியபோதுதான் ராமகிருஷ்ணன் பிடிபட்டார்." என்று கூறினார்கள்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.