நாடு முழுவதும் உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்படும் உபி தேர்தல் மார்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தற்போது ஆளும் அரசான பாஜகவுக்கும், சமாஜ்வாதி கட்சிக்கும் இடையே பலத்த போட்டி உபியில் நிலவுகிறது. 


இந்தநிலையில், உத்தரப்பிரதேசத்தில் இன்று 3 ம் கட்டமாக 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறார். இந்த 3 ம் கட்ட தேர்தலில் 2.15 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில், 627 பேர் வேட்பாளராக களத்தில் உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில்,கொரோனா காலம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடைபிடிக்கப்பட்டே ஓட்டுப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


காலை 7 மணிக்கு தொடங்கியுள்ள ஓட்டுப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடையும் என்றும், தற்போது அமைச்சர்களான ஸ்ரீகாந்த் சர்மா, சுரேஷ் ராணா, சந்தீப் சிங், கபில் தேவ் அகர்வால், சவுத்திரி லக்ஸ்மி உள்ளிட்டவர்கள் இன்று நடைபெற்று வரும் தொகுதிகளில் போட்டியிட்டுள்ளனர். 


வேட்பாளர்கள் சொத்துமதிப்பு : 


உத்தரப்பிரதேசத்தில் தற்போது நடைபெற்று வரும் 3ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் 627 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலில் 245 வேட்பாளர்கள் 1 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளனர். இந்த கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதிகபட்சமாக சமாஜ்வாதி சார்பில் 52 வேட்பாளர்களும், பாஜக சார்பில் 48 பேரும் இடம்பெற்றுள்ளனர். 


அதேபோல், பகுஜன் சமாஜ்வாதி கட்சி சார்பில் 46 பேரும், காங்கிரஸ் கட்சியில் 29, ஆம் ஆத்மி கட்சியில் 18 பேரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 


உத்தர பிரதேச சட்டபேரவை தேர்தலை பொறுத்தவரை பாஜக, சமாஜ்வாடி கட்சி மற்றும் காங்கிரஸ்கட்சிகளிடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தம் 403 தொகுதிகளை கொண்ட இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 350 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதர தொகுதிகளில் கூட்டணி கட்சியினர் போட்டியிட உள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண