அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற பெண்ணை அவரது சகோதரரே தீக்குளிக்க வைத்து வீடியோ எடுத்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தீக்குளிக்க தூண்டிய சகோதரர்


உத்திரபிரதேசத்தின் ஆர்சி மிஷன் போலீஸ் பகுதிக்கு உட்பட்ட நகரின் ரெட்டி காலனியில் இந்த சம்பவம் நடந்துள்ளது, அங்கு ஐந்து குழந்தைகளுக்கு தந்தையான சுந்தர்லால், ஊர்மிளா மற்றும் மகள் சரோஜ் உட்பட மூன்று குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சுந்தர்லால் நகரில் பகுதி நேர வேலை செய்கிறார். மற்ற இரண்டு மகள்களுக்கும் திருமணமாகிவிட்டது.


31 வயது சரோஜ் யாதவ், அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு சென்றவுடன் அந்த பெண்ணை அவரது சகோதரரே வற்புறுத்தி தீக்குளிக்க வைத்துள்ளார். உடனே தனக்குத் தானே சரோஜ் யாதவ் பெட்ரோல் ஊற்றி தீவைதுக்கொண்டார். அதுமட்டுமின்றி எரியும் அவரை காப்பாற்றாமல் அவரது சகோதரர் சஞ்சீவ் யாதவ் விடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவை ஞாயிற்றுக்கிழமை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.



உடல்நிலை கவலைக்கிடம்


அந்த பெண் பலத்த தீக்காயங்களுக்கு ஆளாகியுள்ளார். மேலும் அவர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகளின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்ட சரோஜ் தனது சகோதரரின் வற்புறுத்தலுக்குப் பிறகு தீக்குளிக்கும் நடவடிக்கையை எடுத்ததாக தெரிகிறது. இவர்களது பக்கத்து வீட்டுக்காரரான பவன் குப்தாவின் மனைவி பிரதீக்ஷா சமீபத்தில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. "உள்ளாட்சி தேர்தலில் தனது மனைவி வெற்றி பெற்ற பிறகு பவன் தன்னை அச்சுறுத்தினார்," என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டினார்.


தொடர்புடைய செய்திகள்: GT vs SRH IPL 2023: முதல் டீமாக பிளே ஆஃப்பில் அடியெடுத்து வைக்குமா குஜராத்.. ஹைதராபாத்துடன் இன்று மோதல்.. யாருக்கு வெற்றி?


சகோதரர் தான் காரணம்


மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி), ஷாஜஹான்பூர், எஸ். ஆனந்த், “பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் இருந்து இடுப்பு வரை தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவரின் சகோதரர் பைக்கில் இருந்து பெட்ரோல் எடுக்கப்பட்டதை நாங்கள் கண்டுபிடித்தோம்.


பின்னர் அவர் சகோதரர் வீடியோவையும் எடுத்தார். அந்த சிசிடிவி காட்சிகளையும் நாங்கள் மீட்டுள்ளோம், மேலும் அவர் தனது சகோதரி தீக்குளிப்பு நடவடிக்கை எடுக்க அழுத்தம் கொடுத்ததாகத் தெரிகிறது. இந்த சம்பவத்தில் பவன் குப்தாவின் பங்கு குறித்து விசாரித்து வருகிறோம், கிடைத்த ஆதாரங்களின்படி உரிய நடவடிக்கை எடுப்போம்” என்றார்.



என்ன தகராறு?


ஞாயிற்றுக்கிழமை, பாதிக்கப்பட்டவரின் தாய் ஊர்மிளா பவனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார், பின்னர் அவர் "சண்டை" பற்றி காவல்துறைக்கு தெரிவித்தார். “என்னையும், என் கணவரையும் காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்றபோது, என் மகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றாள்,” என்று ஊர்மிளா கூறினார்.


வெளியாகியுள்ள இரண்டு நிமிட காட்சிகளின்படி, மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர், தனது உறவினர்களுடன் அந்த பெண்ணின் சகோதரர் இந்த விஷயத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தங்கள் சகோதரியைப் பயன்படுத்த முயற்சித்திருக்கலாம் என்றார். "இந்த வழக்கின் அனைத்து அம்சங்களையும் நாங்கள் விசாரித்து வருகிறோம், புகார் பதிவு செய்யப்பட்டவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அதிகாரி மேலும் கூறினார்.