விழுப்புரம்: விழுப்புரம் நகர பகுதியான கீழ்பெரும்பாக்கத்தில் 475 ஆண்டுகள் பழமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து நகை பணத்தை திருடி விட்டு, உண்டியல் காலியாக இருக்க கூடாதென 50 ரூபாய் அளவிலான சில்லரையை மட்டும் விட்டு சென்றுள்ளனர்.


விழுப்புரம் நகர பகுதியான கீழ்ப்பெரும்பாக்கத்தில் 475 ஆண்டுகள் பழமையான திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் தீமிதி விழா கடந்த பங்குனி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இக்கோவிலில் இன்று காலை பூசாரி விஜயன் என்பவர் கோவிலை திறந்து உள்ளே சென்று பூஜை செய்வதற்காக சென்றபோது கோவிலின் வாயிலிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து விழுப்புரம் டவுன் காவல் நிலையத்திற்கு அவர் புகாரளித்ததின் பேரில் விரைந்து வந்த போலீசார்  உண்டியலில் சீல் வைக்கப்பட்ட இரண்டு பூட்டுகளையும் உடைத்து பக்தர்கள்  காணிக்கையாக செலுத்திய நகை, பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள்  கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.


பின்னர் கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் சேகரித்தனர். போலீசாரின் விசாரனையில் கோவிலின் பின்புறம் உள்ள சுற்று சுவர் வழியாக கோவிலின் உள்ளே நுழைந்து மர்ம நபர்கள் திருடி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவில் உண்டியல் பணம் இருபதாயிரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்டியலை உடைத்த திருடர்கள் உண்டியல் காலியாக இருக்க கூடாதென 50 ரூபாய் அளவிலான சில்லரை காசுகளை உண்டியலிலையே வைத்து சென்றுள்ளனர்.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண