தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மஞ்சள்வயல் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பரமணியன் (59), விவசாயியான இவருக்கு ராஜேஸ்வரி (47) என்ற மனைவியும்,இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். பாலசுப்பிரமணியனுக்கு கடந்த சிறிது நாட்களாக மனைவியின் மீது சந்தேகம் வந்தது. இதனால் பாலசுப்பரமணியன் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து, அடிக்கடி தகராறு செய்து, அடித்து கொடுமை படுத்தியுள்ளார். இது குறித்து ராஜேஸ்வரி, அருகில் உள்ளவர்களிடமும் உறவினர்களிடம் கூறி அழுதுள்ளார். அவர்களும், பாலசுப்பிரமணியனிடம், மனைவி ராஜேஸ்வரியை அடித்து துன்புறுத்த கூடாது என எடுத்து கூறினார்கள்.
ஆனால் பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியை கொடுமைபடுத்தி அடித்து வந்ததை நிறுத்த வில்லை. இதனால் ராஜேஸ்வரி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இது குறித்து புலம்பி வந்தார். இதை போல் கடந்த, 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் தேதி, குடிபோதையில் வந்த பாலசுப்பிரமணியன், மனைவி ராஜேஸ்வரியிடம், தகராறு செய்து, அவரை சரமாரியாக தாக்கி, அடித்து விட்டு, வீட்டில் இருந்து வெளியில் சென்றார்.
பின்னர் நள்ளிரவு ஒரு மணிக்கு மீண்டும் வீட்டிற்கு வந்த பாலசுப்பரமணியன், வீட்டின் கதவை தட்டிய போது, அவரது மகள் ஜமுனாராணி கதவை திறந்துள்ளார். அப்போது, துாங்கி கொண்டிருந்த மனைவி ராஜேஸ்வரியை, மீண்டும் திட்டி, கொடுமைபடுத்தி, தாக்கினார். பின்னர் ராஜேஸ்வரி படுத்துறங்கினார். போதையில், ஆத்திரம் அடங்காத, பாலசுப்பரமணியன், வீட்டில் இருந்த கருங்கல்லை எடுத்து மனைவியின் தலையில் போட்டு, விட்டு தப்பியோடி விட்டார். இதில் ராஜேஸ்வரி துடிதுடித்து இறந்தார்.
தந்தை பாலசுப்பிரமணியன், தாய் ராஜேஸ்வரியுடம் சண்டை போட்டு விட்டு, சத்தம் இல்லாமல் இருந்ததையறிந்த, மகள் ஜமுனாராணி, உள்ளே சென்று பார்த்த போது, ரத்தவெள்ளத்தில் ராஜேஸ்வரி கிடந்தார். பின்னர் அருகிலிருந்தவர்கள், ராஜேஸ்வரியை, அதிராம்பட்டினம் அரசு மருத்தவமனைக்கு துாக்கி சென்றனர். ஆனால் பலமாக அடிபட்டதால், ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர். இது குறித்த அதிராம்பட்டினம் போலீசார் வழக்கு பதிந்து, பாலசுப்பரமணியனை கைது செய்தனர். இந்த வழக்கு, தஞ்சாவூர் மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை மகிளா கோர்ட்டின் விசாரணைக்கு வந்தது, வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, மனைவியை கருங்கல்லை போட்டு கொலை செய்ததாக, குற்றம் சாட்டப்பட்ட பாலசுப்பரமணியனுக்கு ஆயுள் தண்டனையும், 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். அபாரத்தை கட்ட தவறினால், 6 மாதம் கூடுதல் சிறை தண்டனை எனவும் உத்தரவிட்டார். பின்னர் பலத்த போலீசார் பாதுகாப்புடன் திருச்சி சிறைக்கு அழைத்து சென்றனர். மனைவியை கொன்ற கணவனுக்க ஆயுள் தண்டனை விதித்ததால், கோர்ட் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.