சோஷியல் மீடியாக்களில் புதிது புதிதாக முளைக்கும் சேலஞ்சுகள் பயனர்களுக்கு பெரிய அளவில் ஆபத்தை உண்டு செய்பவையாக இருக்கின்றன.  ப்ளூவேல் சேலஞ்ஜ் உலக முழுதும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது. அந்த வரிசையில் தற்போது ப்ளாக் அவுட் சேலஞ்ச் என்கிற புதிய சேலஞ்ஜ் ஒன்று வைரலாகி வருகிறது. இதனால் ஸ்காட்லாந்தில் டீன் ஏஜ் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.  ஆர்ச்சி பேட்டர்ஸ்பீ என்னும் சிறுவன் இதற்கு முன்னர் இந்த சேலஞ்சில் பங்கேற்று உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 



அந்த வரிசையில் ஸ்காட்லாந்தின் கம்பர்னால்டைச் சேர்ந்த சிறுவன் தனது அறையில் இறந்து கிடந்துள்ளார். அறையில் இறந்து கிடந்த சிறுவனைப் பார்த்த அவன் தாய் தற்போது அதிர்ச்சியில் உரைந்து போயுள்ளார். மேலும் ஆர்ச்சி பேட்டர்ஸ்பீ போல ஆபத்தான வைரஸ் பிளாக்அவுட்  சேலஞ்சை அவர் முயற்சித்ததால்தான் இறந்ததாகக் கூறியுள்ளார்.25 ஆகஸ்ட் 2022 அன்று தனது அறையில் 14 வயதான லியோன் பிரவுன் இறந்து கிடப்பதை அவரது தாய் லாரின் கீட்டிங் கண்டறிந்துள்ளார்.



ஸ்காட்லாந்தின் கம்பர்னால்டைச் சேர்ந்த 30 வயதான அவர், தனது மகனின் மரணத்தை அடுத்து ஆன்லைன் கேம் குறித்து மற்ற குடும்பங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.




முன்னரி 12 வயதான ஆர்ச்சி, மூளைக்காயத்தால் மரணமடைவதற்கு முன்பு தனது சுவாச மெஷினை ஆஃப் செய்து மூச்சுவிடாமல் இருந்து சேலஞ்சில் பங்கேற்றார்.


இந்த கொடிய சேலஞ்ச் மக்கள் மயக்கமடைந்து விழும் வரை அவர்களின் சுவாசத்தை கட்டுப்படுத்த ஊக்குவிக்கிறது. இது மூளையில் குறைந்த அளவு ஆக்ஸிஜனை செலுத்தும், இதன் காரணமாக வலிப்பு, கடுமையான மூளைக்காயம் ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும்.


 லௌரின் கீட்டிங் கூறுகையில், "லியோனின் நண்பர் ஒருவர், டிக்டோக்கில் லியோன் இதைப் பார்த்த பிறகு அவர்களுடன் ஃபேஸ்டைமில் இந்த சேலஞ்சை மேற்கொண்டதாக என்னிடம் கூறினார்.


"என் லியோன் இதை முதலில் முயற்சி செய்ய வேண்டும் என்று நினைத்தார். அவரும் அவரது நண்பர்களும் இது ஒரு நகைச்சுவையான விஷயம் என்று நினைத்திருக்கலாம்.


"அவர் ஃபேஸ்டைமில் இருந்த குழந்தைகளில் ஒருவர் அவர் என்ன செய்தார் என்று என்னிடம் கூறினார்.மூச்சு நின்று மயக்கமடைந்து விழுந்த லியோன் மீண்டும் எழுந்திருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால் லியோன் திரும்பி வரவில்லை. அந்த சேலஞ்ச் மிகவும் தவறாகிவிட்டது. ஆர்ச்சி பேட்டர்ஸ்பீக்கு இறப்பின் மூலமாக நான் இந்த சேலஞ்ச் பற்றி அறிந்துகொண்டேன்.ஆனால் உங்கள் சொந்தக் குழந்தை அதைச் செய்யும் என்று யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். தயவுசெய்து பிள்ளைகளை எச்சரிக்கவும். அவர்கள் உயிரைவிட  'லைக்குகள்' பெரிது இல்லை."


அவர் லேடி உயர்நிலைப் பள்ளியில் படித்த லியோனைப் பற்றி பேசுகையில், "என் மகன் எப்போதும் மகிழ்ச்சியான, வேடிக்கையான சிறு பையன்.


"எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டே இருப்பான்.லியோனுக்கு எல்லாமே எப்போதும் நகைச்சுவையானதாக இருக்கும்.”


லியோனும் அவரது நண்பர்களும் டிக்டோக்கில் "பிளாக்அவுட் சேலஞ்சை" பார்த்துள்ளனர் என்பது புரிந்து கொள்ளப்படுகிறது.லாரின் மேலும் கூறுகையில்: "நான் TikTok இல் சென்று பிளாக்அவுட் சவால் போன்ற வார்த்தைகளை தேடினேன். அதில் வந்த வீடியோ முடிவுகள் அபத்தமானவையாக இருந்தன."


இதை அடுத்து பயணர்கள் இந்த வார்த்தையை தேடுவதைத் தவிர்க்கவும் ட்ரெண்டில் உள்ள சேலஞ்ச் வீடியோக்களை நீக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.