சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (எ) சுள்ளான் மதன் (26). இவர் மீது பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட சுள்ளான் மதன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஜாமீனில் வெளியே வந்தார்.
சுள்ளான் மதன் கொலை
இந்நிலையில் நேற்று பக்கத்து கிராமமான மேலமங்கலத்தில் நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சுள்ளான் மதன் சென்றார். இதனையடுத்து 5 இருசக்கர வாகனத்தில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் சுள்ளான் மதனை ஓட ஓட விரட்டி சென்று கரும்பு தோட்டத்தில் வைத்து கதையை முடித்தனர். பின்னர் அந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றது. சிவகங்கையில் பட்டப்பகலில் நடந்த இந்த கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: Sullan Madan: 2024ல் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்கு பழி? சினிமா பாணியில் சுள்ளான் மதன்.. அதிர வைக்கும் பின்னணி!
தனிப்படை அமைத்து விசாரணை
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க மருத்துவமனை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டனர். பின்னர் ரவுடி சுள்ளான் மதன் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
3 பேர் கைது
இந்நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பாபு (23), பாலமுருகன், பிரதீப் (28) ஆகிய மூவர் 12 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய பிறகு கொலைக்கான காரணம் தெரியவரும். மேலும் தலைமறைவாக உள்ள 8 குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பட்டப்பகலில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை... யார் இந்த சுள்ளான் மதன்?
பகிரங்க மிரட்டல்
இதனிடையே சுள்ளான் மதன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆதரவாளர்கள் பழிக்கு பழிவாங்குவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்த சம்பவம் சிவகங்கை பொதுமக்கள் மற்றும் போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பல தலைகள் உருளும் என இன்ஸ்டாவில் ஸ்டோரி வைத்தது மட்டுமல்லாமல் காவல்துறைக்கு டைக் செய்துள்ளனர்.
இந்த மிரட்டலை அடுத்து போலீசார் அவர்களின் இன்ஸ்டா பக்கத்தை முடக்கியுள்ளனர். மேலும் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகள் தொடரும்.. தலைகள் உருளும் பதிவு செய்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர் கொலை சம்பவங்கள் நடைபெற்று வரும் சூழலில் இதுபோன்று சமூகவலைதளங்களில் பதிவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
