திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியில் பதினோராம் வகுப்பு படிக்கும் மாணவியை அதேபகுதியை சேர்ந்த வாலிபர் கெல்வின் வயது (22) காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 மாதமாக ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. இது குறித்து கெல்வின் தன்னுடைய நண்பரிடம் நாங்கள் இருவரும் பேசுவதில்லை என்று தன்னுடைய வருத்தத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் கெல்வின் நண்பர் மாணவியிடம் இது குறித்து பேசும்போது இதற்கு மாணவி மறுப்பு தெரிவித்ததால் நீங்கள் இருவரும் எடுத்துள்ள போட்டோவை நான் இணையதளத்தில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு எந்தவித பதிலும் கூறாமல் மாணவி அங்கு இருந்து சென்றுவிட்டார்.


 




இந்நிலையில் இதுகுறித்து யாரோ மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மாணவி கர்ப்பமாக உள்ளதாக பொய்யான ரகசிய கடிதத்தை அனுப்பினர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சைல்டு லைனுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பரமேஸ்வரன் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.


பின்னர் மாணவியை அவரது வீட்டில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு முன்பு திருவண்ணாமலை விடுதிக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து அப்பகுதியில் மாணவி குறித்து பல்வேறு விதமாக தவறான கருத்துக்கள் பரவி வந்துள்ளது. இந்நிலையில் மாணவியின் விசாரணை மூலம் அவருடைய காதலன் கெல்வினை போளூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் கவிதா தேவிகாபுரத்தில் உள்ள பஜாரில் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவியும் காதலனும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததும் பழகியதும் தெரியவந்தது. இதுகுறித்து காதலன் கெல்வின் கைது செய்து போக்சோ நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


 




 


இதுபோன்ற குழந்தைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வரும் புகார்களை விசாரிக்கும் அதிகாரிகள் ரகசியமாக சம்பந்தப்பட்டவர்களை பெற்றோர்களை விசாரிக்க வேண்டும். அதனை தவிர்த்து அதிகாரிகள் பலவந்தமாக வந்து மாணவியின் வீட்டில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக திருவண்ணாமலை விடுதிக்கு அழைத்து வந்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணை பற்றி கிராம மக்களிடையே மிகவும் கேவலமான புரளி கிளப்பி விடப்பட்டது. இதனால் மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள் வேதனை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இனிவரும் காலங்களில் விசாரணையை ரகசியமாக விசாரிக்க வேண்டும். இதனால் அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் இருக்கும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.