திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பழையமனை பகுதியை  சேர்ந்தவர் ஞானபிரகாசம் (லேட்) இவரது மனைவி ஞானமேரி(70). இவர்களுக்கு ஜெசி, சசி, சுசி என்கிற 3 மகள்களும், பிலிப்குமார் என்கிற மகனும் உள்ளனர். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் ஆகிவிட்ட நிலையில்  பிலீப்குமாருக்கும், ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியில் உள்ள ஷர்மிளா என்பவருக்கும்  திருமணமாகி 18 ஆண்டுகள் ஆகின்றது. இவர்களுக்கு இதுவரை குழந்தைகள் இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆம்பூரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார் பிலீப்குமாரின். இந்நிலையில் இவரது தாயார் ஞானமேரிக்கு வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்று தாய் ஞானகுமாரி திடீரென (டிச 7) உயிரிழந்துள்ளார். ஞானகுமாரியின் மகன் பிலீப்குமாரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆம்பூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது தாயார் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்து, உடல் ஒத்துழைக்காத போதிலும் மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு தனது பாசமிகு தாயை பார்க்க நேரில் சென்றுள்ளார்.




நேரில் வந்து தாயை பார்த்து பாசத்தில் கதறி அழுத பிலீப்குமார்  துக்கம் தாளாமல் திடீரென அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பிலீப்குமாருக்கு மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அச்சம் அடைந்த உறவினர்கள் பிலீப்குமாரை மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்க அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் பிலீப்குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். ஈதனை கேட்ட பிலீப்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த உமராபாத் காவல் துறையினர் பிலீம்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனையில் வைத்துள்ளனர். பிலீப்குமாரின் தாயார் ஞானகுமாரி உடலை உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் நல்லடக்கம் செய்த பின்னர் இன்று பிலீப்குமாரின் உடலை மருத்துவமனையில் இருந்து  உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கொண்டு சென்று நல்லடக்கம் செய்தனர். 




ஞானமேரிக்கு நான்கு பிள்ளைகள் இருந்தும் பிலீப்குமார் ஒரே ஒரு ஆண் மகன் என்பதாலும், பிலீப்குமாருக்கு வாரிசு இல்லாததாலும் பிலீப்குமார் மீது தாய் ஞானமேரி அளவு கடந்த பாசத்தோடு இருந்துள்ளார். தாய் மீதும் இதே பாசத்தோடு பிலீப்குமார் இருந்துள்ளார். இத்தகைய பாசம்பிணைபே தாயும் மகனும் ஒன்றாக உயிரிழக்க காரணமாக அமைந்ததாக பொது மக்கள் தெரிவித்தனர். 


ஆம்பூர் அருகே உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாசமுள்ள தாய் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்து மகனும் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து உமராபாத் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.