பெங்களூரு BTM லே அவுட் பகுதியில் இருக்கும் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் ஒரு பெண் உட்பட இரண்டு ஊழியர்கள் மாலை 5.30 மணிக்கு வங்கியை பூட்டிவிட்டு புறப்பாடுக்கு தயாராகி இருக்கின்றனர்.


அந்த சமயத்தில் மறைந்திருந்த அடையாளம் தெரியாத நபர், தான் வைத்திருந்த கத்தியை பெண் ஊழியருடன் இருந்த ஆண் ஊழியரின் கழுத்தில் வைத்து வங்கி கதவை திறக்கும்படி மிரட்டியிருக்கிறார்.பயந்துபோன ஆண் ஊழியர் வங்கி கதவை திறந்திருக்கிறார். திறந்ததும் உள்ளே நுழைந்த கொள்ளையர் வங்கியில் இருந்த 85 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துவிட்டு சென்றார். 


இந்த தகவல் அறிந்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தனர்.  அந்தச் சோதனையில் மங்களூரு, ஷிமோகா, அனந்தபூர் என பல இடங்களுக்கு பேருந்திலேயே பயணம் செய்திருக்கிறார். இந்தத் தகவலை அறிந்த காவல் துறையினர் தங்களது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். அதன்படி அவரது புகைப்படத்தை சக காவல் துறைக்கு அனுப்பினர். அதனடிப்படையில் காவல் துறையினர் கொள்ளையரை கைது செய்தனர்.


மேலும் வாசிக்க: Australian Open 2022: கனவை துரத்திய வேட்கை.. 16 ஆண்டுகள்.. 63 முயற்சிகள்.. தன்னம்பிக்கையின் மறுபெயர் 'அலிஸ்’!


கைது செய்யப்பட்டவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பெயர் தீரஜ் என்பது தெரியவந்தது.  மேலும், அவர் பெங்களூரு காமாட்சிப்பாளையத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் என்பதும் அவர் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்திருக்கிறார் என்பதும் தெரியவந்தது.


அதுமட்டுமின்றி ஆன்லைன் வர்த்தக முதலீடுகளுக்காக வங்கி, நண்பர்கள், உறவினர்கள் என பலரிடம் கடன் வாங்கியதும் அது கைகொடுக்காததால் வங்கியில் கொள்ளை அடிக்கலாம் என முடிவு செய்திருக்கிறார். அதற்காக அவர் யூட்யூபில் கொள்ளை பயிற்சி எடுத்திருக்கிறார். அதன்படி, வங்கியில் கூட்டம் இல்லாத நேரத்தில் கொள்ளையடிக்க முடிவு செய்த தீரஜ் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு  85லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளார்.


அதனையடுத்து காமாட்சிபாளையத்தை சேர்ந்த நண்பர்களிடம் வாங்கிய கடனை அடைக்க தீரஜ் வந்தபோது காவல் துறையிடம் சிக்கினார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


Agra Dowry Case | தகன மேடையில் இருந்த உடலை, உடற்கூராய்வுக்கு அனுப்பிய போலீஸ்.. வரதட்சணை புகாரால் நடவடிக்கை