சிவகங்கை அருகே 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி 10 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்நிலையில் நீதிமன்றத்தில் இருந்து குற்றவாளியை அழைத்துச் செல்லும் போது அவர் மீசையை முறுக்கி நடந்தது பலரையும் முகம் சுளிக்க வைத்தது.






சிவகங்கையை அடுத்துள்ள பெருமாள்பட்டி கிராமத்தை சேர்ந்த கருப்பையா மகன் குமார்  (எ) ராக்கப்பன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறுமியின் தயார் சிவகங்கை அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே அதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அந்த வழக்கானது சிவகங்கையில் உள்ள போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.



 

குமார் மீதான குற்றம் வழக்கில் நிறுபிக்கப்படவே அவருக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பாபுலால் 10 ஆண்டு சிறை தண்டனையும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டார். 4 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவளித்தவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை ரூ5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தனர்.





இந்நிலையில் குற்றவாளியை நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் செல்லும் போது குற்றவாளி ராக்கப்பன் மீசையை முறுக்கியபடி  எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் கெத்தாக போஸ் கொடுத்து  சென்றது அங்கே இருந்தவர்களை முகம்சுளிக்க வைத்தது.