ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மானாமதுரை இளைஞர் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் சீயோன் நகரில் கடந்த 5-ஆம் தேதி இருவராக இருவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பானது. இந்த சம்பவத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்த மானாமதுரை ஜீவாநகர் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், ஆதனூர் அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணராஜபுரம் பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஆகாஷ் டெலிசன்(26) மற்றும் குணா (23) ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் ஆகாஷ்டெலிசனை தேடும்போது கீழே விழுந்ததில் வலது காலில் காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துள்ளார். இதையடுத்து மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனை சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி அதிகாலை ஆகாஷ் டெலிசனுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து ஆகாஷ்டெலிசனின் உடலானது உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கு நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

சிசிடிவி வீடியோக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
ஆகாஷின் பெற்றோர்களை காவலர்கள் சாதியை சொல்லி இழிவுப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. ஆகாஷ் டெலிசன் இறப்பதற்கு முன் நீதித்துறை நடுவரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் காவல்துறையினர் தன்னுடைய காலை உடைத்ததாக கூறியிருந்தார். இதைக் கேட்ட நீதிபதிகள் ஆகாஷ் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை சட்டத்தின் கீழ்  வழக்கு மாற்றம் செய்ய சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிட்டனர். மேலும் ஆகாஷின் உடல் உடற்கூராய்வு செய்து அதை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும் எனவும், காவல்துறையில் உள்ள சிசிடிவி வீடியோக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 
 
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் காவல் மரண வழக்கில் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம்.
 
தொடர்ந்து ஆகாஷின் உடல் கூராய்வு செய்யப்பட்டு அவரது உடலில் 28 இடங்களில் காயங்கள் இருப்பதாக அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ராமநாதபுரம் டிஐஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் திலீபன், எஸ்ஐ குகன், காவலர்கள் தெய்வேந்திரன், சரத்குமார், மனோகரன், காலீஸ்வரன் ஆகியோர் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.