Shocking Video: உத்தர பிரதேசத்தில் பட்டப்பகலில் பாஜக பிரமுகர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 


சுட்டுக்கொலை:


நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. இங்கு அடிக்கடி கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளது. இங்கு, முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தான் உத்தர பிரதேச மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள சம்பால் பகுதியில் பாஜக பிரமுகர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்டுக்  கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.


நடந்தது என்ன?


உத்தர பிரதேச மாநிலம் மொரதபாத் மாவட்டத்தில் சம்பல் என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. பாஜக நிர்வாகி அனுஜ் சவுத்ரி (35) என்பவர் தனது குடும்பத்தினருடன் சம்பல் பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை வழக்கம் போல் தனது வீட்டிற்கு அருகே நடைபயிற்சி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் அவரை வழிமறித்துள்ளனர். முதலில் சகஜமாக பேச்சு  கொடுத்த அவர்கள், பின்னர், கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து சரமாரியாக பலமுறை அனுஜ் சவுத்ரியை சுட்டுள்ளனர். இதில் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் நடுரோட்டில் கிடந்துள்ளனர்.


இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், அனுஜ் சவுத்ரியை சுட்டுவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பியோடினர். துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் வீட்டில் இருந்து வெளியே வந்து


பார்த்தனர். அப்போது, ரத்த வெள்ளத்தில் கிடந்த அனுஜ் சவுத்ரியை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இணையத்தில் வெளியாகி அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.






காரணம்:


சம்பல் பகுதியில் உள்ள அஸ்மோலி பிளாக்கில் 2021ஆம் ஆண்டு நடந்த பஞ்சாய்த்து தேர்தலில் போட்யிட்டு தோல்வி அடைந்தார் அனுஜ் சவுத்ரி.  இந்த தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சவுத்ரிக்கும்  அங்குள்ள சிலருக்கு நீண்ட நாட்களாக மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இதனால்  அரசியில் போட்டி காரணமாக அனுஜ் சவுத்ரியை கொலை செய்துள்ளனர் என்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நான்கு பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருக்கும் நபர்களை தேடி வருகின்றனர்.