புதுச்சேரி: புதுச்சேரி பாக்க முடையான்பேட், முல்லை நகரை சேர்ந்த ஹரிஹரன்- ராதிகா தம்பதியரின் மகன் கிஷோர் (23) பி. டெக்., படித்துள்ளார். இன்று காலை நண்பர்களுடன் லாஸ்பேட்டை தாகூர் அரசு கல்லூரி அருகே உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார். 


சுருண்டு விழுந்து உயிரிழப்பு:


அப்போது திடீரென மயங்கி விழுந்த அவரை அவருடன் விளையாடிக் கொண்டிருந்த சக நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கிஷோர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மாணவன் உயிரிழந்தது குறித்து மாணவரின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தனர் பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கிஷோர் சில தினங்களில் வெளிநாடு செல்ல உள்ள நிலையில் உயிரெழுந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


பெரும் சோகம்:


புதுச்சேரியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது 23 வயது இளைஞர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் பலரும் விளையாடும்போது மற்றும் உடற்பயிற்சி செய்யும்போது உயிரிழக்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.