காதலனுடன் சுற்றுவதைத்தடுத்த  அண்ணனை பழிவாங்குவதற்காக பாலியல் புகார் அளித்த தங்கை. இரண்டு ஆண்டுகளுக்குப்பிறகு தெரிய வந்த உண்மையால் சிறையில் இருந்து வெளியே வந்தார் அண்ணன்.


எங்க அண்ணன், எங்க அண்ணன் அன்பை அள்ளிக்கொடுக்கிறதுல மன்னன் என்று எல்லாம் ஸ்டேடசஸ் வைத்துவரும் தங்கைகளுக்கு மத்தியில், மும்பைச்சேர்ந்த சிறுமி ஒருவர் அவரது அண்ணனை பழிவாங்குவதற்கு  அவரை சிறைக்கு அனுப்பிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மும்பையைச்சேர்ந்த சிறுமி அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பல்வேறு இடங்களில் சுற்றிதிரிவரைப்பார்த்து வந்த அண்ணன், இனிமேல் எங்கும் வெளியே செல்லக்கூடாது,  காதல் எல்லாம் தேவையில்லை என கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிறுமி எப்படி இவன் என் லவ்வரா சந்திக்க கூடாதுன்னு சொல்ல முடியும்? என்ற ஆத்திரத்தில் அண்ணனை பழிவாங்க வேண்டும் என்று திட்டமிட்டுள்ளார்.





இதனையடுத்து இவர் என் அண்ணன் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அம்மா, அப்பா வீட்டில் இல்லாதப்போது தன்னை சரமாரியாக தாக்கி பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து 24 வயதான அச்சிறுமியின் அண்ணன் மீது போக்சா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் சிறுமியின் அண்ணனுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.  இப்படி 2 ஆண்டுகள் சிறையில் செய்யாத குற்றத்திற்காக அண்ணன் இருந்து வந்த நிலையில், வெளியில் எடுப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட அண்ணனுக்கு ஆதரவான வழக்கறிஞர்கள், சிறுமி அளித்த பாலியல் புகாரில் இவர் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுவருகிறார். ஆனால் அப்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானாரா? என்பது குறித்து எந்த மருத்துவச்சோதனையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மைனர் என்பதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை எனவும் கூறினார்.


மேலும் செய்யாதக் குற்றத்திற்காக 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுவருவதால் அவரை விடுவிக்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டது. இந்நிலையில் தான்  பொய்யான குற்றச்சாட்டால் அண்ணன் சிறையில் இருக்கிறான் என்று வருத்தமடைந்து சிறுமி தெரிவித்த கருத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. “ என்னுடைய அண்ணன், நான் காதலிப்பதை மறுத்தார் எனவும், அவரை பழிவாங்கவே பொய்யாக புகார் அளித்தேன்“, என்ற உண்மையை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.





இதனையடுத்து பொய்யான புகாருக்காக 2 ஆண்டுகள் சிறையில் இருந்த அண்ணனை நீதிமன்றம் விடுவித்தது. இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. அண்ணன் நம்மை கண்டித்தால் சிறிது நாள்கள் பேசாமல் இருப்போம். ஆனால் இப்படி ஜெயிலுக்கு அனுப்பமாட்டோம் என்ற கருத்துக்களை மக்கள் வெளிப்படுத்துகின்றனர்.