பீகாரில் இளைஞர் ஒருவர் தொடர்ந்து தனிமையில் இருக்கும் பெண்களுக்கு முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


இதுதொடர்பான வீடியோவில், பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனையில் இந்த சம்பவம் நிகழ்வதை காட்டுகிறது. அங்கு சுகாதாரப் பணியாளராகப் பணியாற்றி வரும் பெண் ஒருவர், போனில் பேசிக் கொண்டிருக்கிறார். அப்போது சுவர் ஏறி மருத்துவமனை உள்ளே குதிக்கும் இளைஞர் ஒருவர் அவரது பின்னால் வருகிறார். பின் சட்டென முன்பக்கமாக வந்து அப்பெண்ணை வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கிறார்.






இதனை சற்றும் எதிர்பாராத அந்த சுகாதார பணியாளர் சுதாரிப்பதற்குள் அந்த இளைஞர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார். இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் ஜமுய் காவல்துறையில் புகார் அளித்ததை தொடர்ந்து விசாரணையை போலீசார் தொடங்கினர்.


மேலும் பாதிக்கப்பட்ட பெண் ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், அந்த நபர் ஏன் மருத்துவமனை வளாகத்திற்குள் வந்தார் என்று தனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார். அதேசமயம் அந்த நபர் யாரென்று எனக்கு தெரியாது. எனக்கு அவர் முத்தம் கொடுத்ததும் அதிர்ச்சியடைந்து உதவிக்காக உடனடியாக மருத்துவமனை ஊழியர்களை அழைத்தேன். ஆனால், அதற்குள் அந்த நபர் தப்பியோடிவிட்டார் என கூறியுள்ளார். 


இந்த வீடியோவை கண்ட பொதுமக்கள் உடனடியாக சீரியல் கில்லரை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் சீரியல் கில்லர் போல, இந்த நபர் சீரியல் கிஸ்ஸர் என கடும் விமர்சனங்களும், கேலிகளும் எழுந்துள்ளது.