கரூர் அரசு கலைக் கல்லூரியில் பொருளாதாரப் பிரிவு பேராசிரியராக பணியாற்றி வந்தவர் இளங்கோ (53). இவர் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து கடந்த 09.07.2019-இல் பாலியல் தொந்தரவு, ஜாதி பெயரை சொல்லி திட்டுதல், பொது இடத்தில் அவமானப்படுத்துதல், கொலை மிரட்டல் விடுதல் உள்ளிட்ட 6 சட்டப் பிரிவுகளில் இவர் மீது தாந்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த வழக்கு விசாரணை வழக்கின் தீர்ப்பு இன்று கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மாவட்ட நீதிபதி கிருஸ்டோபர் கல்லூரி மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட பேராசிரியர் இளங்கோவிற்கு ஏககாலத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவிக்கவேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
தற்போது ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துவரும் நிலையில் கரூரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் கல்லூரி பேராசிரியருக்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி இருப்பது சமூகத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.