மாணவனுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தொடர்பாக ஆசிரியர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

Continues below advertisement

அரசு பள்ளி ஆசிரியர்

ராமநாதபுரம் மாவட்டத்தைப் பூர்வீகமாக கொண்ட அருள் பாக்கியம். இவர் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் 6ம்  முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பாடம் நடத்தி வந்துள்ளார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவனிடம், ஆசிரியர் அருள் பாக்கியம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், வீட்டிற்குச் சென்றதும் நடந்த சம்பவத்தை கூறி பெற்றோரிடம் அழுதுள்ளார். 

இதையும் படிங்க: 70 வயது மூதாட்டி கூட பார்க்காமல்.. செய்யக்கூடாததை செய்த தவெக நிர்வாகி.. அடுத்த நொடியே ஆக்ஷன்!

Continues below advertisement

பாலியல் தொல்லை

இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மாணவனுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது உறுதியானது. 

போச்சோவில் கைது

இதனையடுத்து ஆசிரியர் அருள் பாக்கியம் மீது குழந்தைகளைப் பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் போக்சோ  சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து  அருள் பாக்கியத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவனுக்கு ஆசிரியரே பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.