சாலைகளில் குப்பை அகற்றி வந்த தூய்மை பணியாளர் , சரக்கு வாகன மோதி கொடூர விபத்து.‌சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்த தூய்மை பணியாளர்.


 


வாகன ஓட்டிகளின் கவனக் குறைவால் ஏற்படும் சாலை விபத்துகளால், தொடர்ந்து அப்பாவி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் பகுதியில் தூய்மை பணி மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தாம்பரம் முடிச்சூர் தூய்மை பணி


தாம்பரம் முடிச்சூர் மேம்பாலம் அருகே உள்ள சாலையில் வழக்கமாக மேற்கொள்ளும் தூய்மை பணிகளை, தூய்மை பணியாளர்கள் மேற்கொண்டு வந்தனர். எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் முடிச்சூர் சாலை, காலை நேரங்களில் மட்டும் வாகனங்கள் போக்குவரத்து இல்லாமல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் காலை வேலைகளில் தூய்மை பணியாளர்கள் தங்கள் பணிகளை மேற்கொள்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.


 


வழக்கமாக நடைபெற்ற தூய்மை பணி


முழிச்சூர் சாலை பகுதிகளில் தர்மு (35) என்ற தூய்மை பணியாளர், சக தூய்மை பணியாளர்களுடன் இணைந்து குப்பைகளை அகற்றி வந்தார். அப்பொழுது யாரும் எதிர்பாக்காத வகையில் முடிச்சூர் சாலையில் அதிவேகமாக வந்த சரக்கு வாகனம், ஓட்டுனரின் கட்டுப்பாட்டில் இருந்து தூய்மை பணியாளர்கள் மீது மோதியது. 


 


சரக்கு வாகனத்தில் வந்த எமன்


இதில் பணி மேற்கொண்டு வந்த தூய்மை பணியாளர்கள் மூன்று பேர் தூக்கி வீசப்பட்டனர். தூக்கி வீசப்பட்டத்தில் தரப்பு என்ற தூய்மை பணியாளருக்கு தலை மற்றும் இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் துடி துடித்த தர்முவை அக்கம்பக்கத்தினர் மீட்டு முதல் உதவி அளித்த நிலையில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மற்ற இருவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 



கதறி அழுத உறவினர்கள்



இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உயிரிழந்த தர்மு  குடும்பத்தின மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. காலை நேரத்தில் சாலை காலியாக இருக்கும் பொழுது, அதிவேகமாக வந்த சரக்கு வாகனத்தால் இந்த கொடூர விபத்து நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. விபத்து நடைபெற்ற நிலையில் சரக்கு வாகன ஓட்டுனர் மாயமாக்கியுள்ளார். இதுகுறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.