Crime Murder Affair: கணவனை கள்ளக்காதலன்களுடன் சேர்ந்து கொலை செய்து நாடகமாடிய, மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மனதை உலுக்கும் கொடூர கொலை:
உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியில் தகாத உறவால் கணவனை கொன்று, ட்ரம்மில் போட்டு சிமெண்ட் கலவையை கொட்டி மனைவி நாடகமாடிய சம்பவமே இன்னும் பலரால் மறக்கப்படவில்லை. இந்நிலையில் சம்பல் பகுதியில் கடந்த நவம்பர் 18ம் தேதி முதல் காணமல் போன ராகுல் என்பவர், கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது.மனைவி ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் ஆகியோரால், ராகுல் கொல்லப்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், உடல் ஒரு கிரைண்டரைப் பயன்படுத்தி துண்டுகளாக வெட்டப்பட்டு வெவ்வேறு இடங்களில் அப்புறப்படுத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிதைந்த நிலையில் உடல்
சந்தௌசி பகுதியை சேர்ந்த காலணி வியாபாரியான ராகுல் (40), 15 ஆண்டுகளுக்கு முன்பாக ரூபி என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 12 வயதில் ஒரு மகன் மற்றும் 10 வயதில் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் தான், கடந்த நவம்பர் 20ம் தேதியன்று இரண்டு நாட்களாக தனது கணவன் ராகுல் காணாமல் போனதாக மனைவி ரூபி புகாரளித்துள்ளார். இந்நிலையில், 27 நாட்களுக்குப் பிறகு அதாவது டிசம்பர் 15ம் தேதியன்று, ஒரு வடிகாலில் பாலிதீனில் சுற்றப்பட்ட பாதி சிதைந்த உடலை போலீசார் மீட்டபோது இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. ஐந்து நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனையின் போது, மீட்கப்பட்ட கையில் ராகுல் என்ற பெயர் பச்சை குத்தப்பட்டு இருந்ததை கொண்டு, அவர் யார் என அடையாளம் காணப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் ரூபியை பிடித்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர்.
குழந்தை தந்த ட்விஸ்ட்
ராகுலின் வீட்டைச் சுற்றி தேடுதலை முடுக்கிவிட்டதோடு, அக்கம்பக்கத்தினரிடமும் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்திள்ளனர். அப்போது, வீட்டிலிருந்து இரும்புக் கம்பி, மரப்பலகை மற்றும் ஒரு ஹீட்டரில் உலர்ந்த ரத்தக் கறைகள் இருப்பது தெரியவந்தது. ரூபியின் தகாத உறவு குறித்து அக்கம்பக்கத்தினரும் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதுபோக வீட்டிற்கு இரண்டு பேர் அடிக்கடி வந்து செல்வதாக ராகுலுன் மகளும் தெரிவித்துள்ளார். அதன்படி, ரூபி மற்றும் அவரது காதலன் கௌரவ் ஆகியோர் சேர்ந்து தான் இந்த கொடூர கொலையை நிகழ்த்தியுள்ளனர் என்பது திட்டவட்டமாக உறுதியாகியுள்ளது.
கையும் களவுமாக சிக்கிய ரூபி:
இறுதிகட்ட விசாரணையில், சம்பவம் நடந்த 18ம் தேதியன்று தாங்கள் உடல் ரீதியான உறவில் இருந்தபோது, ராகுல் கையும் களவுமாக பிடித்துவிட்டதாக ரூபியும், கௌரவும் ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன்படி, அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் முடிவில் இருவரும் சேர்ந்து, இரும்பு கம்பி மற்றும் ஆணி பதித்த சுத்தியலால் கடுமையாக தாக்கியதில் ராகுல் தலையில் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து உடலின் கை, கால்கள் மற்றும் தலையை தனியாக துண்டித்து அவற்றை க்ரைண்டரில் போட்டு மிகவும் கொடூரமாக சிதைத்துள்ளனர்.
அதனை பாலிதீன் பைகளில் அடைத்து பல்வேறு பகுதிகளில் வீசி அப்புறப்படுத்தியுள்ளனர். இதற்கு அபிஷேக் எனும் மற்றொரு நபரும் உதவியுள்ளார். அதன் பிறகு சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக தாமாகவே சென்று காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளனர். தலை கிடைக்காத நிலையில் கொல்லப்பட்டவரை அடையாளம் காண்பது சிரமமாக இருந்த நிலையில், கையில் இருந்த பச்சை மற்றும் ராகுலின் மகள் அளித்த தகவலின் பேரில் உண்மையான குற்றவாளிகள் 3 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்