தஞ்சாவூர்: கல்லூரியில் பேராசிரியர் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வந்திருக்கு. எங்கே? எப்படி விண்ணப்பிப்பது? தகுதி, சம்பளம் பற்றிய விபரங்களை தெரிஞ்சுக்கோங்க. 

Continues below advertisement

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஐயா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எந்ததெந்த பணியிடங்கள் என்ன விபரம் உங்களுக்காக...

இக்கல்லூரியில் சுயநிதிப் பிரிவில் ஆங்கிலம், இயற்பியல், விஸ்வல் கம்யூனிகேஷன் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் உதவிப் பேராசிரியர்களை நியமிக்க உள்ளனர். இதற்கான கல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலைப்பட்டம் பெற்றிருப்பதோடு, NET, SET, SLET அல்லது Ph.D முடித்திருக்க வேண்டும்.

Continues below advertisement

உதவிப் பேராசிரியர் பணிக்குத் தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக:  Ph.D முடித்தவர்களுக்கு - ரூ.20,000, NET தேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.18,000, SET தேர்ச்சி பெற்றவர்களுக்கு - ரூ.17,000,

பேராசிரியர் பணியிடங்களைத் தவிர, நிர்வாகப் பணிகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அந்த பணியிடங்கள்... எழுத்தர் (Clerk), ஆய்வகத் தொழில்நுட்புநர் (Lab Technician), ஆய்வக உதவியாளர் (Lab Assistant). இந்த பணியிடங்களுக்கான தகுதி... ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், கணினி அறிவு மற்றும் Tally தெரிந்திருக்க வேண்டும். மேலும் பிற பணிகளுக்கும் ஆட்கள் தேவையாம்... அதன்படி அலுவலக உதவியாளர், ஓட்டுநர், துப்புரவாளர் (ஆண்கள் மட்டும்) ஆகிய பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.anjac.edu.in என்ற முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். விண்ணப்பங்களை மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ கல்லூரித் தாளாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே காலதாமதம் இல்லாமல் விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்கள்.