சேலம் அருகே கள்ளக்காதலியுடன் பேசியதால் ஆத்திரமடைந்த கூலித்தொழிலாளி முதியவரை கட்டையால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் வீராணம் குள்ளப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (50), பழைய பேப்பர், பிளாஸ்டிக், இரும்பு பொருட்களை சேகரித்து விற்பனை செய்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (46) என்பர் கணவரிடம் இருந்து பிரிந்து வந்து சந்திரன் உடன் கடந்த 6 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வருகிறார். இதே பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி என்பவர் வாய்ப்பு கிடைக்கும் போது தன்னுடைய வேலைக்கு சந்திரனையும் உடன் அழைத்துச் சென்று வந்துள்ளார். இந்த பழக்கத்தால் அவ்வபோது கந்தசாமி (56) , சந்திரன் மற்றும் மாரியம்மாள் மூன்று பேரும் கூட்டாக மது அருந்துவது வழக்கம்.
இந்த நிலையில் மூன்று பேரும் நேற்று இரவு குப்பனூர் பேருந்து நிழல் கூரையில் அமர்ந்து ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது கந்தசாமியும், மாரியம்மாளும் பேசிக்கொண்டிருந்தனர். இதனைக் கண்டு சந்தேகமடைந்த சந்திரன் எதற்காக கந்தசாமி உடன் பேசுகிறாய் என்று கேட்டு மாரியம்மாளை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். அந்த கந்தசாமி தட்டி கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வாக்கு வாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த சந்திரன் அருகில் கிடந்த விறகு கட்டையை எடுத்து கந்தசாமியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
சந்திரனை தடுக்க முயன்ற மாரியம்மாளையும் கையிலிருந்த கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். இதில் கந்தசாமிக்கு மண்டை உடைந்து ரத்த காயம் ஏற்பட்டதால் வலி தாங்க முடியாமல் சத்தமிட்டு உள்ளார். இதனால் பயந்து போன சந்திரன் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் படுகாயமடைந்த கந்தசாமியை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கந்தசாமி உயிரிழந்தார். இதுபற்றி வீராணம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வேறு ஒருவரின் மனைவியான மாரியம்மாள் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் சந்திரன் அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்ததும் தற்போது கந்தசாமி உடன் மாரியம்மன் அடிக்கடி பேசி வந்ததால் அவரது நடத்தையில் சந்தேகம் அடைந்து, கட்டையால் கந்தசாமியை கட்டையால் அடித்தும் தெரியவந்தது. இதையடுத்து சந்திரன் மற்றும் மாரியம்மாளை கைது செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதலி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் நண்பனை நடு ரோட்டில் அடித்துக் கொள்ளப்பட்ட சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.