சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வீரன் பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (55). இவர் மேட்டூர் நகராட்சி உள்ள 14- வது வார்டு திமுக கவுன்சிலராக உள்ளர். இந்நிலையில் இன்று மேட்டூர் நகராட்சியில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தனக்கு சொந்தமான காரில் வந்து இறங்கினார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த மருமகம்பல் வெங்கடாஜலத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியது.
அங்கிருந்து தப்பி ஓடி வெங்கடாஜலம் நகராட்சி அலுவலகத்தில் புகுந்து கதவை தாழிட்டு கொண்டார். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிட்டதை அடுத்து மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்திற்கு மேட்டூர் டி.எஸ்.பி,சண்முகம் தலைமையில் சென்ற காவல்துறையினர் படுகாயம் அடைந்த வெங்கடாஜலத்தை மீட்டு முதல் உதவி சிகிச்சைக்காக மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் முயற்சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அதிமுக முன்னாள் நகர செயலாளர் பழனிசாமி மற்றும் அவரது மைத்துனர் மாதேஷ் ஆகியோர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் வெங்கடாசலம் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு நீதிமன்றம் சென்று விடுதலை ஆனார். மேலும் இவர் மீது மேட்டூர் காவல் நிலையத்தில் அடிதடி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலவில் உள்ளது. இதனால் முன் விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்து இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.