சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டில் படிக்கும் மாணவர் ஒருவர், கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி டூவீலரில் கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவனின் பெற்றோர் அவர்களது உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேடினர். கண்டுபிடிக்க முடியவில்லை.
பின்னர் சேலம் மாவட்டம் கருப்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து செய்து தேடி வந்தனர். இந்நிலையில் பெற்றோர் ஆட்கொணர்வு மனுவையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதையடுத்து மாணவரிடம் நட்பாக இருந்தது யார்? என கருப்பூர் காவல்துறை விசாரித்தனர். யாரிடமும் அதிகமாக பேசமாட்டான் என நண்பர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் கருப்பூர் காவலர்களின் தீவிர விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை பாரதி நகரில் மாணவன் இருப்பதை கண்டுபிடித்தனர். அவருடன் இருந்த இளம் பெண்ணையும் பிடித்து விசாரித்தபோது, அப்பெண்ணின் பெயர் வாசுகி (21) என்பதும், மாணவனுடன் கல்லூரியில் சேர்ந்து படித்ததும், இருவரும் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் பிடித்து கருப்பூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது இருவரும் கல்லூரியில் படித்தபோது காதலில் விழுந்தது தெரிய வந்தது. வாசுகி மாணவனுடன் திருமணம் செய்துகொண்டு வாழலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளதாக தெரியவருகிறது. அந்நேரத்தில் மாணவனுக்கு 18 வயது முடிய 3 மாதம் இருந்தது. காதலில் விழுந்த இருவரும் எதையும் யோசிக்காமல் முடிவை எடுத்துள்ளனர்.
வாசுகி அழைப்பை ஏற்று மாணவன். கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு, வாசுகியுடன் சென்றுள்ளார். பேரிகையில் அவர்கள் வீடு வாடகைக்கு எடுத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தியுள்ளது தெரியவந்தது. மாணவன் வீட்டிலிருந்து மாயமான நேரத்தில் அவர் சிறுவன். எனவே சிறுவனை கடத்தி சென்று திருமணம் செய்த வாசுகியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் மீது குழந்தை திருமணம். சிறுவனை கடத்திச் சென்று வாழ்ந்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர். மேலும் வாசுகி 3 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து இருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது