மகாராஷ்டிரா பால்கர் மாவட்டத்தின் நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் மும்பை போலீசார் நடத்திய சோதனையில் 1,400 கோடி ரூபாய் மதிப்பிலான 700 கிலோகிராம் மெபெட்ரான் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, கரிம வேதியியல் முதுகலை பட்டதாரி உட்பட 5 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.






நலசோபராவில் உள்ள போதைப்பொருள் தயாரிப்பு ஆலையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு சோதனை நடத்தியதாக அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அந்த அலுவலர், "குறிப்பிட்ட தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போதை தடுப்பு பிரிவு குழு அந்த வளாகத்தில் சோதனை நடத்தியது. அப்போது, தடைசெய்யப்பட்ட மருந்தான மெபெட்ரோன் தயாரிக்கப்படுவது கண்டறியப்பட்டது.






குற்றம் சாட்டப்பட்டவர்களில் 4 பேர் மும்பையில் கைது செய்யப்பட்ட நிலையில், ஒருவர் நலசோபராவில் கைது செய்யப்பட்டார். நலசோபராவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி கரிம வேதியியல் முதுகலைப் பட்டதாரி ஆவார், போதைப்பொருள் தயாரிப்பதில் தனது திறமையைப் பயன்படுத்தியுள்ளார். சமீப காலமாக மாநகர காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்ட மிக பெரிய போதைப்பொருள் கடத்தலில் இதுவும் ஒன்று" என்றார்.


 






'மியாவ் மியாவ்' அல்லது எம்டி என்றழைக்கப்படும் மெபெட்ரோன், போதைப்பொருள் மருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட மருந்தாகும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண