நீச்சல் குளத்தில் சல்லாபத்தில் ஈடுபட்ட பெண் காவலரும் காவல் உயர் அதிகாரியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 


ராஜஸ்தான் மாநிலத்தின் ஆர்பிஎஸ் சர்வ்வீஸில் உள்ள உயரதிகாரி ஹீராலால் சைனி. இவர் ஆஜ்மீர் மாவட்டம் பேவார் பகுதியில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருக்கிறார். இவரும் இவருடன் பணியாற்றும் பெண் காவலர் ஒருவரும் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு இருவரும் நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்துள்ளனர். திடீரென இருவரும் அரை நிர்வாணக் கோலத்தில் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த பெண் காவலரின் 6 வயது மகனும் நீச்சல் குளத்தில் இருந்துள்ளார். இந்தக் காட்சிகளை யாரோ வீடியோ எடுத்துப் பகிர இது சமூக வலைதளங்களில் வைரலானது. இதனையடுத்து இந்த விவகாரம் காவல்துறையையும் எட்டியது.




தனது மனைவியை இப்படி ஒரு கோலத்தில் அதுவும் குழந்தையின் பார்வையில் நடந்த அருவருக்கத்தக்க விஷயத்தை பொறுக்க முடியாமல் கணவர் போலீஸில் புகார் கொடுத்தார். இதனையடுத்து பெண் காவலரும், காவல் உயர் அதிகாரியும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவர் மீதும் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் காவலருக்கு 2008 ஆம் ஆண்டு தான் ராஜஸ்தான் காவல்துறையில் வேலை கிடைத்தது. ஆனால், அந்தப் பெண்ணோ கிடைத்த வேலையை இப்படி துஷ்பிரயோகம் செய்துள்ளார்.


காதல் என்பது இரு தனிநபர் சார்ந்த விஷயம் என்றாலும் கூட பொதுவெளியில் அதுவும் காவல்துறையில் இருப்பவர்கள் சமூகத்துக்கு முன் உதாரணமாகத் திகழ வேண்டாமா என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர், குழந்தையின் முன் காவல்துறையில் இருக்கும் இருவர் இவ்வாறாக அநாகரிமாக நடந்து கொண்டது பாலியல் வக்கிரத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. சம்பந்தப்பட்ட இருவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.


சின்ன சின்ன சபலங்கள் தான் பெரிய மனிதர்களின் சரிவுக்குக் கூட காரணமாக அமைந்துவிடுகிறது. பொது வாழ்வில் இருப்போருக்கு ஒழுக்கம் மிக மிக அவசியம். அப்போது தான் மற்றவர்களுக்கு ஒழுக்க நெறியை போதிக்க முடியும். காவல் துறையில் இருந்து கொண்டு இதுபோன்று பட்டப்பகலில் வெட்ட வெளிச்சத்தில் பலரும் காணும்படி அதுவும் குறிப்பாக ஒரு குழந்தையின் முன்னால் இப்படி ஒரு அநாகரீகமான செய்கையை செய்ய முடிந்தவர்களுக்கு சஸ்பெண்ட் நடவடிக்கை போதவே போதாது என்பது தான் பெரும்பாலோனோரின் வாதமாக இருக்கிறது. இவர்களுக்கான தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்துள்ளன.