திருப்பூரைச் சேர்ந்த ரவுடி பேபி சூர்யா, மதுரையைச் சேர்ந்த சிக்கா என்பவருடன் மதுரை திருநகரில் வசித்து வந்தார். டிக்டாக் பிரபலமான இவர்கள், டிக்டாக் தடைக்கு பின் யூடியூப் மூலம் வீடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். பெரும்பாலும் ஆபாச வார்த்தைகளை இவர்கள் பயன்படுத்துவதாகவும், சிலர் மீது அவதூறு பரப்புவதாகவும் குற்றச்சாட்டு எழுந்த நிலையில் , இவர்களை கைது செய்யக்கோரி பல்வேறு தரப்பினர் இதற்கு முன் கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் ரவுடிபேபி சூர்யா மற்றும் சிக்கா மீது கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் பெறப்பட்டது.
அதன் அடிப்படையில், மதுரை விரைந்த கோவை போலீசார், ரவுடி பேபி சூர்யா மற்றும் அவரது முன்னாள் காதலன் சிக்காவை கைது செய்து தற்போது கோவை அழைத்து வருகின்றனர்.
டிக்டாக் உலகில் தொடங்கிய இவர்களது அறிமுகம், அதன் பின் டிக்டாக் தடைக்கு பிறகு, யூடியூப் வழியில் தொடர்ந்தாலும், இவர்களது அணுகுமுறை ஒரே மாதிரியே இருந்தது. ஆபாசம் என்கிற ஆயுதத்தை அவர்கள் தொடர்ந்து பிடித்து தொங்கிக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக பல்வேறு புகார்கள், குற்றச்சாட்டுகள் மற்றம் கண்டனங்களை அவர்கள் சந்தித்தனர். ஒருமுறை நீதிபதி நேரடியாக இவர்களை கண்டித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, சிறிது நாட்கள் அடக்கி வாசித்தா ரவுடி பேபி சூர்யா, அதன் பின் மீண்டும் தன்னுடைய அர்ச்சனைகளை தொடர்ந்தார். அதுவும், சூர்யா தேவிக்கு உடனான சிக்காவின சண்டையில், சிக்காவுக்கு ஆதரவாக ரவுடி பேபி சூர்யா வெடித்து சிதறினார். சிக்காவும் தன் பங்குக்கு மீதை எடுப்பது, அது, இது, என பல்வேறு சபதங்களை எடுத்தார். இப்படி அநாகரீகமாகவும், ஆபாசமாகவும் தங்கள் நடவடிக்கையில் தொடர்ந்த இவர்கள், சிலரை அவ்வப்போது அவதூறாகவும் சித்தரித்தனர். அப்படி சித்தரித்த போது தான், இது போன்ற புகாரில் அவர்கள் சிக்க நேர்ந்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்