திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினம் பெட்ரோல் பங்கில் செலுத்திய பெட்ரோலுக்கு பணம் கேட்டதால், வெடிகுண்டை கையில் காட்டி மிரட்டிய இளைஞர்கள் மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவரை கைது செய்து குலசேகரப்பட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்செந்தூர் அருகே குலசேகரபட்டினத்திலுள்ள சகாயம் பெட்ரோல் பங்கில் வழக்கம்போல் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் விநியோகம் செய்து கொண்டிருந்திருந்தனர். வழக்கம்போல் பெட்ரோல் போடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு இருக்கும்போது, ஒரே வாகனத்தில் வந்தனர் மூவர், பெட்ரோல் போடுன்னு சொன்னதும் எவ்வளவுக்குன்னு ஊழியர் கேட்க, சொன்ன தொகைக்கு பெட்ரோலை போட்டு உள்ளார் பங்க் ஊழியர். பெட்ரோலை போட்டு முடித்ததும், பணம் கேட்டவுடன், ”யார்ட்ட கேட்குற நீன்னு மிரட்டிய கும்பல் போட்றுவேன்” என மிரட்டல் விடுத்துள்ளனர்.
அப்போது, அதே இருசக்கர வாகனத்தில் பயணித்து வந்த குலசேகரபட்டினத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் மல்லையரசு (30), ஆழந்தலையை சேர்ந்த சக்கரியாஸ் மகன் லயோ (26), குலசேகரப்பட்டினம் மாடசாமி புரத்தை சேர்ந்த ராஜா மகன் பாம்பு ரமேஷ் ஆகிய இளைஞர்கள் ஊழியரிடம் பெட்ரோல் செலுத்திய பின் பணம் தர முடியாது என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் வாக்குவாதம் முற்றி இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்திருந்த கத்தி மற்றும் அரிவாள் கொண்டு ஊழியரை தாக்கியும், பின்னர் வெடிகுண்டை கையில் காட்டி வீசிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்தார். இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இதுகுறித்து மூன்று இளைஞர்கள் மீது வழக்கு பதிவு செய்து, குலசேகரப்பட்டினத்தை சேர்ந்த மல்லையரசு( 30)என்ற இளைஞரை கைது செய்து, குலசேகரபட்டினம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஊழியரோ கையில் இருந்த பாம் மற்றும் அரிவாளை கண்டதும் அமைதியாக தொடர்ந்து போலீசில் சொல்லியிருக்கிறார். ”இப்போ ஒருத்தரை பிடிச்சிருக்காக” என்றார். மேலும் தப்பி ஓடிய இரு இளைஞர்களை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.பெட்ரோல் பங்கில் வெடி குண்டு வீசுவதாக கூறி மிரட்டிய இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.