புதுச்சேரியில் இருந்து கடலூர் செல்லும் தனியார் பேருந்தை வழி மறித்து அரிவாளால் கண்ணாடியை உடைத்த ரவுடிகள். பேருந்தில் பயணிகள் இருந்த போதே துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்த ரெட்டிச்சாவடி காவல் துறையினர்.


Actor Ajith Statement: தல வேண்டாம்; AK ஓகே - அஜித் குமார்


புதுச்சேரியில் இருந்து நேற்று மதியம் கடலூர் நோக்கிச் சென்ற ஸ்ரீ லட்சுமி என்ற பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழி மறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்கு கத்தியால் தாக்கிவிட்டு அதே அரிவாளால் பேருந்து கண்ணாடியை உடைத்து, பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இந்த சம்பவம் பேருந்தில் இருந்த சிசிடிவியில் பதிவாகி இருந்தது. இந்த நிலையில் சிசிடிவி காட்சி யைக் கொண்டு ரெட்டியார் பாளையம் காவல் நிலையத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் புகார் அளித்தனர், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை செய்தனர்.


Bachelor Movie : பேச்சுலர் படத்தில் என்னுடைய ரோல் இதுதான்: பிராங்க் ஸ்டார் ராகுல் கலக்கல் வீடியோ


GV Prakash Speech in Bachelor Movie : நல்ல வேளை நான் தப்பிச்சிட்டேன் -ஜிவி பிரகாஷ்


விசாரணை மேற்கொண்டதில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், ஆண்டி பகுதியை சார்ந்த மருதுவுடன் இணைந்து பேருந்து வழி மறித்து தகராறில் ஏற்பட்டது தெரியவந்தது. இது தொடர்பாக விசாரணையில் கூறியதாவது :- மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்ற போது டிரைவர் நிறுத்தாமல் சென்றதால், ஆத்திரத்தில் அவரது நண்பர்களான ரவுடிகைகளை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டதும் மேலும் பேருந்து கண்ணாடியை உடைத்தும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Maanaadu: மாநாடு வெற்றி..கையெடுத்து கும்பிட்ட சிம்பு


மூன்று ரவுடிகள் பேருந்து கண்ணாடியை உடைத்த சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. சிசிடிவி காட்சியில் தோன்றும் ரவுடிகள் பேருந்து ஓட்டுனரை வெட்டிவிட்டு பேருந்து கண்ணாடிகளை தாக்கும் காட்சி புதுச்சேரி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


 


பேஸ்புக் பக்கத்தில் தொடர


 


ட்விட்டர் பக்கத்தில் தொடர


 


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்