ராஜஸ்தான் மாநிலத்தில் 7 வகுப்பு மாணவர் ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் கூறவில்லை என்பதற்காக கொடூரமாக அடித்த சம்பவம் மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.


ராஜஸ்தானில் தொடரும் மாணவர் கொடுமைகள்


ஒரு சமத்துவ நாடாக இந்தியாவை வளர்க்க வேண்டும் என்று கனவு கண்ட பெரும் தலைவர்கள் வாழ்ந்த நாட்டில் சாதி, மத ஏற்றத்தாழ்வுகள், சாதி ரீதியான வன்மங்கள், தாக்குதல்கள் இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. அதிலும் ராஜஸ்தான் மாநிலம் சாதிய ரீதியான பிரச்சனைகளால் சமீப காலங்களாக கவனம் பெற்று வருகிறது. சமீபத்தில் கூட ராஜஸ்தான் மாநிலத்தில் பானையில் இருந்த தண்ணீரை குடித்ததற்காக சிறுவன் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் சுதந்திர தின கொண்டாட்டத்தின் மீதே ஆணித்தரமான கேள்வியை எழுப்பியது. 



மீரா குமார் வருத்தம்


முன்னாள் சபாநாயகர் மீரா குமார் 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் இது மட்டும் மாறவில்லை என்று வேதனை தெரிவித்திருந்தார். அந்த பிரச்சனைக்கு பிறகும் மேலும் மேலும் நாடெங்கும் சாதிய வன்கொடுமைகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. அப்படி ஒரு சம்பவம் தான் மீண்டும் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்தேறி உள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: Liger Movie Review: மனோகரா... எம்.குமரன் S/O மகாலட்சுமி... அப்டேட் வெர்சனா லைகர்? படம் முடிந்ததும் முதல் விமர்சனம்!


பெற்றோர் புகார் அளிக்கவில்லை


இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பல்வேறு தலித் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை அடுத்து அசோக் மாலி என அடையாளம் காணப்பட்ட ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட தலித் மாணவரின் பெற்றோர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.



சிகிச்சை அளித்த மருத்துவர் பேட்டி


இந்த புதிய சம்பவம் பார்மரில் உள்ள அரசு பள்ளியில் நடந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் நின்றதால் ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. ஆசிரியரால் அந்த மாணவர் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர் மயங்கி விழுந்ததாகவும், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. "மாணவரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் வயிற்று வலி மற்றும் தலைவலி என்று கூறுகிறார், பெரிய காயம் எதுவும் இல்லை. எனினும், நாங்கள் முன்னெச்சரிக்கையாக சிடி ஸ்கேன் மற்றும் சோனோகிராபி செய்துள்ளோம்," என்று குழந்தைக்கு சிகிச்சை அளித்த டாக்டர் திலீப் சவுத்ரி கூறினார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.