Crime: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.


20 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை


இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. 


இந்த நிலையில், ராஜஸ்தானில் சுமார் 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் பஜன்லால் சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.


இங்கு, அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 20 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் எழுந்து உள்ளது. பாலி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு  வந்தது. அந்த பெண் அளித்த புகாரில், அங்கன்வாடியில்  வேலை வாங்கி தருவதாகக் கூறி, தன்னையும், சுமார் 20 பெண்களையும் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்துள்ளனர்.


2 பேர் மீது வழக்குப்பதிவு:


எங்களிடம் ரூ.5 லட்சம் கேட்டனர். கேட்ட பணத்தை கொடுக்கவில்லை என்றால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டினார்கள் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த புகாரின்பேரில், சிரோஹி கவுன்சிலர் மகேந்திர மேவாடா மற்றும் முன்னாள் மாநகராட்சி ஆணையர் மகேந்திர சவுத்ரி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.


இருப்பினும்,  இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டார்களா என்ற எந்தவித தகவலும் வெளிவரவில்லை.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேலைக்காக  சிரோஹி என்ற இடத்திற்கு வந்த சில பெண்கள் இவர்களை சந்தித்துள்ளனர்.


இவர்கள் இருவரும்  பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுகளை வழங்கினர். பெண்களுக்கு வழங்கப்பட்ட  உணவில் மயக்க மருந்துகள் கலந்ததாகவும், அதை உட்கொண்ட பிறகு அவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 




மேலும் படிக்க


J.P. Nadda: பிரதமர் மோடிக்கு நெருக்கமான மாநிலம் தமிழ்நாடு - சென்னையில் ஜே.பி. நட்டா பேச்சு


CUET PG 2024: க்யூட் முதுநிலைத் தேர்வு விண்ணப்பத்தில் பிப்.13 வரை திருத்தம் செய்யலாம்; எந்த தகவலில்? எப்படி?