ராஜஸ்தானில் இரண்டாவது திருமணம் செய்த நபர் மற்றும் அவரது மனைவிக்கு செருப்பு மாலை போட்டு, சிறுநீரை குடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ராஜஸ்தானை அடுத்த ஜெய்ப்பூரில் உள்ள மதோராஜ்புரா காவல்நிலையத்திற்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் இருந்த ஜோடி, லிவிங் டூ முறையில் இருந்து, அதன்பிறகு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதையடுத்து இரண்டாவது திருமணத்தால் கோபமடைந்த முதல் மனைவியின் சகோதரர்கள் கடந்த ஆகஸ்ட் 22 அன்று பியாடி குக்கிராமம் அருகே அவரை அழைத்து வந்து காலணிகளால் மாலை அணிவிக்கப்பட்டு, பின்னர் சிறுநீரை குடிக்கும்படி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஜோடிக்கு மேலும் ரூ.45,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த மனிதாபிமானமற்ற சம்பவத்தின் வீடியோ வைரலாக பரவியதையடுத்து இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.


இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது, “இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நபருக்கும் 2006ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவரும் வரதட்சனை பிரச்சனை தொடர்பாக அவரது மனைவியை பிரிந்து வாழ்கிறார். சில மாதங்களுக்கு முன்னாள் இந்த நபர் வேறொரு பெண்ணை 2வது திருமணம் செய்தார். இது குறித்து முதல் மனைவி, ராஜஸ்தான் கிராம ’காப்' பஞ்சாயத்தில் புகார் அளித்தார்.


இதையடுத்து, வாலிபரையும், அவரின் 2வது மனைவியையும் பஞ்சாயத்து பெரியவர்கள் விசாரித்தனர். 2வது திருமணம் செய்த குற்றத்துக்காக வாலிபருக்கு ரூ.45 ஆயிரம் அபராதம் விதித்த அவர்கள், இருவருக்கும் செருப்பு மாலை அணிவித்தனர். மேலும், இருவருக்கும் பாட்டிலில் நிரப்பப்பட்ட சிறுநீரை கொடுத்து குடிக்க வைத்துள்ளனர். 


பாதிக்கப்பட்ட பெண் வழக்குப் பதிவு இதுகுறித்து முதலில் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் காவல்துறையினர் வழக்கு தொடரவில்லை என்றும், 3 மாதங்களுக்கு பிறகு வீடியோ வைரலானதை அடுத்து, மூன்று குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்தனர் என்றும் கூறப்படுகிறது. 


கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தினேஷ் சர்மா கூறுகையில், "பாதிக்கப்பட்ட பெண் நேற்றுதான் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தார், அதன் பிறகு, வழக்கைப்பதிவு செய்த காவல்துறையினர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகளான 5 பேரை கைது செய்தனர்," என்று தெரிவித்தார். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.