புல்லட்.. காக்கி உடை.. 'நாங்க போலீஸ் ஒழுங்கா பணத்தை கொடுங்க’ : மிரட்டியவர்களை தட்டித்தூக்கிய போலீஸ்

காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூரில் புல்லட், காக்கி உடை அணிந்து, போலீஸ் என கூறி வடமாநில இளைஞர்களிடம் பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு போலி போலீஸ் கைது.

Continues below advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வைப்பூர் ஊராட்சியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் பல்வேறு வட மாநிலங்களைச் சேர்ந்த சேர்ந்த இளைஞர்கள் வைப்பூரில் வாடகைக்கு குடியிருந்து இங்கு உள்ள தொழிற்சாலைகளில் பணி செய்து வருகின்றனர். 

Continues below advertisement

தமிழ் மொழி தெரியாத வடமாநில இளைஞர்களை குறிவைத்து இங்குள்ள இளைஞர்கள் சிலர் கஞ்சா போதையில் மது அருந்த பணம் கிடைக்காத விரக்தியில் பொதுமக்களை தாக்கி, பணம், செல்போன், செயின் பறிப்பு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்து வருகிறது. 


போலீசாரின் இப்பகுதிகளில் ரோந்து பணிகளை தீவிர படுத்தாமல் கஞ்சா வியாபாரி, சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு வரும் நபர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். போலீசாரை கண்காணிக்க வேண்டிய தனிப்பிரிவு போலீசாரும் எஸ்.பி உள்ளிட்ட மேலதிகாரிகளுக்கு தகவல் அளிப்பதில்லை.

இதனால் இப்பகுதியில் தொடர்ந்து அதிகரித்துவரும் குற்றச் செயல்களால் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருவது வாடிக்கையாக உள்ளது. இதனிடையே வைப்பூர் ஊராட்சியில் வாடகைக்கு குடியிருந்து வேலை செய்து வரும் லுட்பூர் ரகுமான் என்பவர் வைப்பூர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, புல்லட்டில் காக்கி பேண்ட் அணிந்தவாறு டிப்டாப்பாக வலம்வந்த இருவர் ரகுமானை மடக்கி தாங்கள் இருவரும் போலீஸ் என கூறி நீ என்ன கஞ்சா வைத்திருக்கிறாயா எனக் கேட்டு உன்னை சோதனை செய்ய வேண்டும் என சோதனையிட்டுள்ளனர். சோதனையில் ஏதும் கண்டறியாத நிலையில் பணம் கேட்டு அவரை மிரட்டி தாக்கியுள்ளனர்.

இதில் ஒருகட்டத்தில் பயந்துபோன லுட்பூர் ரகுமான் தன் வங்கி கணக்கில் வைத்திருந்த 5 ஆயிரத்தை கூகுள் பே மூலம் போலீஸ் எனக் கூறி வந்த நபரின் எண்ணுக்கு அனுப்பி உள்ளார். 


இதையடுத்து தனக்கு நடந்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களிடம் தெரிவிக்க கூகுள் பே மூலம் அனுப்பிய செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த மர்ம ஆசாமிகள் இருவரையும் இளைஞர்கள் வரவழைத்துள்ளனர். பின்னர் அந்த இருவரையும் நீங்கள் யார் என்று இளைஞர்கள் விசாரித்தபோது எது வேண்டுமானாலும் எங்கள் அய்யாவிடம் நீ பேசிக் கொள் என்று ஒருவரை தொடர்புகொண்டு இளைஞர்களிடம் கொடுத்துள்ளார்.

இதனால் இளைஞர்களுக்கு இருவர் மீதும் மீது சந்தேகம் ஏற்படவே ஒரகடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்ததில் அவர்கள் இருவரும் போலி போலீஸ் என தெரியவந்தது.

இது தொடர்பாக லுட்பூர் ரகுமான் அளித்த புகாரின் பேரில் போலி போலீசாக வழிப்பறியில் ஈடுபட்டு வலம் வந்த காரணி தாங்கள் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (34), வஞ்சுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த சரவணன் (45). ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.


விசாரணையில் இருவரும் தாங்கள் இருவரும் போலீஸ் என கூறி பல இடங்களில் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து வழிப்பறி சம்பவத்திற்கு பயன்படுத்திய இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola