புதுச்சேரி: பிரபல தனியார் மருத்துவ கல்லூரி மேலாளர் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக வருமானம் தருகிறோம் என்ற ஆசை வார்த்தையை நம்பி 34,85,000 ஆயிரம் ரூபாய் பணத்தை இழந்தார்.


புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் மருத்துவக் கல்லூரியில் செக்யூரிட்டி மற்றும் வேலை ஆட்கள் மேலாளராக பணிபுரியும் சேலத்தைச் சேர்ந்த நந்தகுமார் என்பவர் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அவரை வாட்ஸ் அப்பில் தொடர்பு கொண்ட இணைய வழி மோசடிக்காரர்கள் நான் இந்தியாவில் உள்ள பிரபல தனியார் கம்பெனியின் மனிதவள மேலாளர் பேசுகிறேன் என்று மேற்படி நபரை தொடர்பு கொண்டு வாட்சப்பில் மெசேஜ் அனுப்பி உள்ளார். மேலும் நீங்கள் முதலீடு செய்கின்ற பணத்திற்கு 20% ஒரு நாளைக்கு இலாபம் தருகின்ற மாதிரி எங்களிடம் நிறைய வியாபாரங்கள் இருக்கின்றது. அதில் நாங்கள் கொடுக்கும் டாஸ்க்கள் முடித்துவிட்டால் உடனடியாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டு விடும். இந்த பிசினஸில் நீங்கள் ஈடுபட விரும்பினால் நாங்கள் சொல்கின்ற வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி நாங்கள் கொடுக்கின்ற டாஸ்கை முடித்து விட்டால் உடனடியாக உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை அனுப்பி விடுவோம் என்று இணையவழி மோசடிக்காரர்கள் சொன்னதை நம்பி முதல் முறையாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை அனுப்ப உள்ளார்.


மோசடிக்காரர்கள் 20   யூடியூப் சேனலை கொடுத்து சப்ஸ்கிரைப் செய்ய சொல்லி இருக்கின்றார்கள் அதை  அவர் செய்தவுடன் அவருடைய வங்கி கணக்கிற்கு 21,000 பணத்தை இரண்டு மணி நேரத்திற்குள் அனுப்பி வைத்துள்ளனர். அதை நம்பிய மேற்படி மேலாளர் கடந்த நான்கு நாட்களாக 35 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பணத்தை அனுப்பிய பிறகு மேற்படி மேலாளரின் வங்கி கணக்கில் 52 லட்சம் ரூபாய் பணம் இருப்பது போன்று காட்டுகிறது ஆனால் பணத்தை வங்கி கணக்கிலிருந்து எடுக்க முடியவில்லை, என்னுடைய பணத்தை எடுக்க அனுமதிக்க மாட்டார்கள் என்று இன்று இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார் சம்பந்தமாக ஆய்வாளர் கீர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


இது சம்பந்தமாக இணைய வழி காவல் கண்காணிப்பாளர் திரு பாஸ்கரன் அவர்கள் கூறுவது என்னவென்றால் ஆன்லைனில் வருகின்ற எதையுமே நம்பி முதலீடு செய்வதோ குறைந்த விலையில் பொருட்கள் வருகிறது என்று ஆர்டர் செய்து வாங்குவதோ வேண்டாம் இது பொதுமக்களை இணை மோசடிக்காரர்கள் ஏமாற்ற  யுக்திகளை கையாளுகிறார்கள் என்றும் இதுவரை புதுச்சேரியில் 3100-க்கும் மேற்பட்டோர்  32 கோடி அளவிற்கு இந்த வருடத்தில் இணைய வழி மோசடி இல் சிக்கி  பணத்தை இழந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.