வில்லியனூரில் குழந்தை திருமணம் செய்த வழக்கில் சென்னை மயிலாப்பூர் வாலிபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வநாதன் பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளார்.


புதுச்சேரி, வில்லியனூர் கணுவாபேட்டை புது நகரைச் சேர்ந்த 16 வயது சிறுமியை 2020 ஆம் ஆண்டு குழந்தை திருமணம் செய்த சென்னை மயிலாப்பூர் அடுத்த நொச்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த விஜி என்கிற விஜய், இவரது தாய் லதா ஆகியோர் மீது குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் வில்லியனூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.  வழக்கு பதிவு செய்யப்பட்ட பொழுது சிறுமி இரண்டு மாத கர்ப்பமாக இருந்ததால் விஜய் மீது போக்சோ  சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு புதுவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில் புதுவை நீதிமன்ற தலைமை நீதிபதி செல்வநாதன் பரபரப்பு தீர்ப்பை வழங்கினார். அதில் குற்றம் சாட்டப்பட்ட விஜி என்கிற விஜய்க்கு 30 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், இவரது தாய் லதாவுக்கு ஐந்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். தண்டனை விதிக்கப்பட்ட விஜய் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம்:


குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் என்பது குழந்தைத் திருமணத்தைத் தடுக்க இந்தியாவில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும். இது 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக ஆங்கில அரசினால் முன்வைக்கப்பட்டு, 1929 செப்டம்பர் 28ஆம் நாள் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இது சார்தா சட்டம் என்றும் அழைக்கப்பட்டது. இதன்படி, திருமணம் செய்வதற்கு பெண்ணுக்கு பதினான்கு வயதும், ஆணுக்கு பதினெட்டு வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும். 19ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே, இதுபோன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர ஆங்கிலேய அரசு முயன்றது. 1880 குஜராத்தைச் சேர்ந்த, பி.எம்.மலபாரி என்பவர் ஆங்கில அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் ஐந்து வயது பெண் குழந்தைகளுக்கெல்லாம் திருமணம் செய்யும் கொடுமையை அரசு தலையிட்டு உடனே நிறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் மலபாரி குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்று, பல விவாதங்களுக்கு உள்ளாகி, இறுதியில் 1891 ஜனவரியில் சட்ட முன்வடிவாக அரசினால் முன்வைக்கப்பட்டது. இச்சட்டம் 1930 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வந்தது. தற்போது பெண்ணின் திருமண வயது 18 எனவும், ஆணின் திருமண வயது 21 எனவும் மாற்றப்பட்டுள்ளது. 12 வயது நிறைவடைந்த பின்பே பெண்களுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்றும், பருவமடைந்த பின்பே உடலுறவுக்கு அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அந்தச் சட்டம் முன்மொழிந்தது.புதிய திருப்பம் பேகுவ சட்டம் இயற்றபட்டது. 


 




 


என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.