வானூரில் இருந்து புதுவை சுல்தான்பேட்டைக்கு லாரியில் வந்த எம்- சாண்டில் ஆண் சடலம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


புதுச்சேரி வில்லியனூர் பரசுராமபுரம் பகுதியை சேர்ந்தவர் அனந்தகிருஷ்ணன். இவர் ஜல்லி, மணல் வைத்து புளுமெட்டல் தொழில் செய்து வருகிறார். இவரிடம் பெருமுக்கல் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற ஓட்டுனர் வேலை செய்து வருகிறார். இந்நிலையில்  சக்திவேல் டிப்பர் லாரியை எடுத்துக்கொண்டு தொள்ளமூர் சென்று எம் சாண்ட் ஏற்றிக்கொண்டு வந்து வில்லியனூர், சுல்தான்பேட்டை, வளர்பிறை நகர் பகுதியில் கொட்டியுள்ளார்.


அப்போது திடீரென டிப்பர் லாரியில் இருந்து இறந்த நிலையில் 45 வயது மதிக்க தக்க ஆண் சடலம் கீழே வந்து விழுந்துள்ளது. இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் வில்லியனூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனே காவல் ஆய்வாளர் வேலய்யன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு, காவலர் சங்கர் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு இதுசம்பந்தமாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


 




என்ன செய்ய வேண்டும்? 




நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.