கர்நாடகாவின் ராமநகராவில் உள்ள ஒரு வீட்டில் புதைக்கப்பட்ட புதையலைக் கண்டறிவதற்காக சூனியம் செய்யும் சடங்குகளைச் செய்யும் போது, ​​தினசரி கூலி வேலை செய்யும் ஒரு பெண்ணை ஒரு சாமியார் தனது முன் நிர்வாணமாக உட்காரும்படி கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. பெண்ணும் மைனரான அவரது மகளும் மீட்கப்பட்ட நிலையில், 40 வயதான சாமியார், மேலும் ஐந்து பேருடன், இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் கர்நாடகா மனிதாபிமானமற்ற தீய பழக்கவழக்கங்கள் மற்றும் சூனியம் தடுப்புச் சட்டத்தின் தொடர்புடைய விதிகளின் கீழ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சாமியார் ஷாஹிகுமார், அவரது உதவியாளர் மோகன், கொத்தனார்கள் லட்சுமிநரசப்பா, லோகேஷ், நாகராஜ் மற்றும் பார்த்தசாரதி என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். போலீஸ் தரப்பில், ஷாஹிகுமார் தமிழகத்தைச் சேர்ந்தவர் என கூறப்பட்டுள்ளது.


கர்நாடக மாநிலம் பூனஹள்ளியைச் சேர்ந்த விவசாயி ஸ்ரீனிவாஸ் என்பவர், 2019-ம் ஆண்டு திருமண நிகழ்ச்சிக்காக தமிழகம் சென்றிருந்தபோது ஷாஹிகுமாரை தொடர்பு கொண்டார். 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஸ்ரீனிவாஸின் வீட்டிற்கு ஷாஹிகுமார் வந்திருந்த போது, ஸ்ரீநிவாஸ் தனது வீட்டிற்குள் புதையல் மறைந்திருப்பதாக ஷாஹிகுமார் தெரிவித்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



“புதையலைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் அவரது குடும்பம் துன்பங்களைச் சந்திக்க நேரிடும் என்று ஸ்ரீநிவாஸ் கூறி பயமுறுத்தினார். அதற்கு பயந்து அவ்வாறு செய்வதாக உறுதியளித்த சாஷிகுமார், ஸ்ரீனிவாஸிடம் இருந்து முன்பணமாக ரூ.20,000 வாங்கியுள்ளார். கோவிட்-19 லாக்டவுன் மற்றும் பிற சிக்கல்கள் காரணமாக, சஷிகுமார் பணியை ஒத்திவைத்து வந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்பு, அவர் மீண்டும் ஸ்ரீனிவாஸிடம் சென்று பணியைத் தொடங்குவதாகக் கூறினார்,”என்று விசாரணை அதிகாரி கூறியதாக அறிக்கை கூறுகிறது. சாமியார் சடங்குகளைச் செய்ய விவசாயியின் வீட்டில் ஒரு அறையைத் தேர்ந்தெடுத்தார். பூஜையின் போது நிர்வாணம் ஆக்கி பெண்ணை தன் முன் உட்கார வைத்தால் புதையல் தானாகவே வெளிப்படும் என்று கூறினார். அந்தப் பெண் ஸ்ரீனிவாஸ் குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், சடங்குகளின் போது அவர் முன் நிர்வாணமாக உட்கார ஒரு பெண்ணுக்கு ரூ. 5,000 கொடுத்து உக்காரவைத்துள்ளனர் என்று ஆதாரங்களை மேற்கோள் காட்டி தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.



மறைந்திருந்த புதையலைக் கண்டறிவதற்கான சடங்குகளின் போது நரபலி கொடுப்பதற்காக அந்தப் பெண்ணின் நான்கு வயது மகள் சம்பவ இடத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், காவல் கண்காணிப்பாளர் எஸ் கிரிஷ், அந்த அறிக்கைகளை நிராகரித்தார். “பூசாரி மற்றும் பிறரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து உள்ளூர்வாசிகள் காவல்துறையினருக்கு எச்சரித்தனர்” என்று எஸ்பி கூறுகிறார். குழந்தையில்லாத இந்த தம்பதியரால் இரண்டு பாலியல் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.


 


இதேபோல், சில வாரங்களுக்குப் பிறகு, குழந்தை பெறுவதற்காக அவர்களை நரபலி கொடுக்க சூனியம் வைப்பவர் கூறியிருக்கிறார். மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடந்த இந்தச் சம்பவத்தின் காரணமாக, தம்பதிகள் மற்றும் சூனியம் வைத்தவர் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.