Crime: உத்தர பிரதேசத்தில் கர்ப்பிணிணை, அவரது  தாய் மற்றும்  சகோதரர் உயிரோடு பெட்ரோல் ஊற்றி ஏரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடூரம்:


உத்தர பிரதேச மாநிலம் நவக்கடா பகுதியைச் சேர்ந்தவர் 23 வயதான  இளம்பெண். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இளைஞருடன் நெருக்கமாக இருந்த பெண், சில மாதங்களுக்கு பின் கர்ப்பம் அடைந்தார். இந்த விஷயம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் கோபத்தில் கடுமையாக தாக்கியுள்ளதாக தெரிகிறது. மேலும், இளம்பெண்ணை தகாத வார்த்தைகளால், அவரது தாயும், சகோதரும் பேசியதாக தெரிகிறது. 


இந்நிலையில், கடந்த 28ஆம் தேதி இளம்பெண்ணை, அவரது தாய் மற்றும் சகோதரர் ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அப்போது, அந்த பெண்ணிடம் அங்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டும், தாக்கியும் உள்ளதாக தெரிகிறது. இதனை அடுத்து, கடும் கோபத்தில் இருந்து தாய் மற்றும் சகோதரர், இளம்பெண்ணை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.


தாய், சகோதரர் வெறிச்செயல்:


இதனால், இளம்பெண் அலறி துடித்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்த இளம்பெண்ணை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும்,  70 சதவீத தீக்காயங்களுடன் இளம்பெண் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


இதனை அடுத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட தாய் மற்றும் சகோதரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கர்ப்பமடைந்த பெண்ணை அவரது தாய் மற்றும் சகோதரர் எரித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தொடரும் வன்முறைகள்:


பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.  இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.  குறிப்பாக வடமாநிலங்களில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. சமீபத்தில் கூட, மத்திய பிரதேச மாநிலத்தில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து நடுரோட்டில் தூக்கி வீசியுள்ளனர். இதன்பின், சிறுமி ரத்தப்போக்குடன் அரை நிர்வாணமாக உதவி கேட்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 




மேலும் படிக்க 


Crime: பாலியல் வன்கொடுமை; ரத்தப்போக்குடன் அரை நிர்வாண கோலத்தில் உதவி கேட்ட சிறுமி! செத்துப்போன மனித நேயம்!