சினை ஆடு ஒன்றை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தப்பிச்சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கேரளாவில் காசர்கோடு அருகே கோட்டச்சேரி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த உணவகத்தில் வளர்த்து வரப்பட்ட ஆடு 4 மாத சினையாக இருந்துள்ளது.
இந்நிலையில், வழக்கத்திற்கு மாறாக ஆடு கத்தும் சத்தம் கேட்டு அந்த உணவகத்தைச் சேர்ந்த மற்ற ஊழியர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது, மூன்று பேர் சேர்ந்து அந்த சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது தெரிய வந்தது. மேலும், மற்ற ஊழியர்கள் வருவதை அறிந்து 3 பேரும் அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றுள்ளனர்.
அதில், ஒருவரை மட்டும் ஊழியர்கள் விரட்டிச்சென்று பிடித்தனர். மற்ற இருவரும் தப்பிச்சென்றுள்ளனர். பிடிபட்ட நபர் அதே உணவகத்தில் பணிபுரிந்து வரும் தமிழகத்தை சேர்ந்த செந்தில் என்பவர் எனத் தெரிந்துள்ளது. இதையடுத்து, செந்திலை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
தொடர்ந்து, தப்பிச்சென்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். மேலும், விலங்குகள் வதை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் உள்ள பகுதிகளில் 4 மாத சினை ஆட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
IPL 2022 : மீண்டும் கே.எல் ராகுல் டீமை பொளந்த ராகுல் டெவாடியா
Oscars 2022: 6 விருதுகளை அள்ளிய டியூன் திரைப்படம்... ஆஸ்கர் 2022 அப்டேட்ஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்