FedEx Blue Dart courier Scam: இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வயதானவர்கள், சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள நபர்கள், பெண்களை குறிவைத்து அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து பெட்டெக்ஸ் (FEDEX) புளு டார்ட் (BLUEDART) கொரியர் நிறுவனங்களில் இருந்து பேசுவதுபோல் உங்களுடைய பெயரை குறிப்பிட்டு உங்களுடைய ஆதரர் எண்ணை பயன்படுத்தி இந்தியாவிலிருந்து வெளிநாட்டிற்கு புலித்தோல், போதை பொருட்கள் வெளிநாட்டு கரன்சிகள், சிம் கார்டுகள், போலி பாஸ்போர்ட்கள் மற்றும் சில கடத்தல் பொருட்கள் கொண்ட பார்சல் வந்திருப்பதாகவோ அல்லது TRAI எனப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தில் இருந்து பேசுவதாக கூறி நம்முடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணை பயன்படுத்தி பல வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டு அதன் மூலம் பல கோடி ரூபாய்க்கு ஹவாலா பண பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவித்து அது சம்பந்தமாக மும்பை சைபர் கிரைம் போலீஸ் சிபிஐ குற்ற பிரிவு போலீசார். விசாரணை செய்ய வேண்டியது இருப்பதாகவும் கூறி போன் அழைப்பை மற்றொரு நபருக்கு பார்வேர்டு செய்வார்கள்.


எதிர்முனையில் காவல் துறையினரை போன்று பேசும் நபர் ஸ்லைம் வாட்ஸஆப் , ஸ்கைப்போன்ற சமூக வலைதள ஆப்பை தம்முடைய செல்போனில் பதிவிறக்கம் செய்ய சொல்லி அதன்முலம் வீடியோ காலில் போலீஸ் போன்று சீருடை அணிந்து கொண்டு நம்முடைய ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்டவிரோதமாக பலகோடி ரூபாய்க்கு பணம் பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் மேலும் பல வங்கிகளில் கணக்கு இயக்கி முறையற்ற பணப்பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாகவும் உங்களுடைய சேமிப்புத் தொகை நிலையான வைப்பு தொகை (பிக்சட் டெபாசிட்) போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டி அவர்கள் கொடுக்கும் ஆர்பிஐ வங்கி கணக்கிற்கு அந்த பணத்தை உடனடியாக அனுப்பும் படியும் கூறுவார்கள்.




மேலும் அவர்களுடைய தொலைபேசி அழைப்பை கட் செய்தாலோ, அல்லது அவர்கள் பேசுவதைப் பற்றி பிற நபர்களிடம் தெரிவித்தாலோ அவர்களை போலீசார் உடனடியாக கைது செய்து விடுவதாகவும் கைது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றால் அயர்கள் சொல்வது போல் பணத்தை அனுப்பும் படியும். அந்த பணத்தை ஆய்வு செய்த பின்னர் மீண்டும் அனுப்பிவிடுவதாகவும் உங்களுடைய வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவதாகவும் கூறுவார்கள்


மேலும் நாம் நம்புவதற்கு ஏற்கனவே போலியாக தயார் செய்த பத்திரிகை செய்திகள் உச்ச நீதிமன்ற கைது உத்தரவு போலியான வலைதளங்கள் கார்டுகளை அனுப்பி வைப்பார்கள். அதை உண்மை என்று நம்பி பார் தங்களுடைய  வங்கி கணக்குகளில் உள்ள சேமிப்பு பணம் மற்றும் வைப்புத் தொகை பணத்தை சந்தேக நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்து ஏமாற்றப் படுகிறார்கள்.  பணத்தை பெற்ற உடன் சந்தேக நபர்கள் அனுப்பிய அனைத்து மெசேஜ் மற்றும் தடயங்களை செயலிகளில் இருந்து அழித்து விடுகின்றார்கள்.




மேலும் இத்தகைய குற்ற செயல்களில் ஈடுபடுபவர்தங்களை போலீஸ் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக அடையாளம் தெரியாத நபர்களின் பெயரில் வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி எண்களை பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்றி வருவதும், இத்தகைய குற்றச் செயல்களில் குற்றவாளிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு பொது மக்களை ஏமாற்றி வருவதும் தெரியவருகிறது.


132 கோடி:



இத்தகைய குற்றங்கள் தொடர்பாக சென்னை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் இந்த வருடத்தில் மட்டும் ரூ. 132,46,34,766/- பணத்தை பொதுமக்கள் சந்தேக நபர்களிடம் இழந்தது தொடர்பாக 190 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இது, சம்மந்தமாக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு ஆ அருண் பொது மக்களுக்கு தெரிவித்துள்ள செய்தியில்:



எந்தவொரு மாநில காவல் துறையோ, CBI போன்ற புலனாய்வு அமைப்புகளோ இதுபோன்று ஸ்கைப் வாட்ஸ்ஆப், சிக்னல் போன்ற செயலிகள் மூலம் அழைத்து விசாரணை செய்வதில்லை



சந்தேக நபர்களிடமிருந்து அழைப்புகள் வந்தால் அந்த எண்களை உடனடியாக நிராகரித்து விடும்படியாகவும் அல்லது முடக்கம் செய்யவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்



மேலும் பொது மக்கள் அடையாளம் தெரியாத தொலைபேசி எண்களில் இருந்து தொடர்பு கொள்ளும் நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.



முன்பின் தெரியாத நபர்களிடம் நம்முடைய தனிப்பட்ட வங்கி சார்ந்த மற்றும் பண இருப்பு விவரங்கள் கடவுச்சொற்கள் OTP எண்களை தெரிவித்து, தெரியாத வங்கி கணக்குக்குக்கு பணத்தை அனுப்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்.



பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக சென்னை பெருநகர காவல் துறையில் நான்கு இணை ஆணையாளர் அலுவலகங்கள் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மவுண்ட் சேத்துப்பட்டு காவல் நிலையம் அண்ணா நகர் நிலையம், தண்டையார்பேட்டை காவல் நிலையம் மற்றும் 12 காவல் துணை ஆணையாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் கிரைம் காவல் நிலையம் மற்றும் சைபர் கிரைம் குழுக்கள் ஆகியவற்றை அணுகி நிவாரணம் தேடிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்படுகின்றார்கள்.


மேலும், சைபர் குற்றங்கள் மூலம் பணம் இழப்பு ஏற்பட்டால் சைபர் கிரைம் உதவி எண் 1930 மற்றும் வலைதய முகவரி https://cybercrime.gov.in- புகார். தெரிவிக்கும் படியாகவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இது போன்ற நிகழ்வுகளில் உடனடியாக ஏதும் உதவி தேவை இருந்தால் அருகில் இருக்கும் காலம் நிலத்தையோ அல்லது அவசர உதவி எண் 100-ஐ தொடர்பு கொள்ளலாம் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.