திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த, புதுபாளையம்  கிராமத்தில்,  மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த நாராயணசாமி, என்பவரின் மகன் மனோகரன் வயது (61) , இவர் செங்கம் அரசு மருத்துவமனையில் மலேரியா தொற்றுநோய் களப்பணியாளராக பணியாற்றி வந்தார். தற்போது ஓய்வு பெற்றதாகவும், தன்னுடைய ஓய்வூதிய பணமான ரூபாய் மூன்று லட்சத்தை (Rs.3,00,000/-) சென்ற மாதம்  செங்கம் SBI வங்கியில் இருந்து எடுத்துக்கொண்டு செங்கம் அரசு மருத்துவமனையை நோக்கி நடந்து சென்று கொண்டு இருந்தார்.


இவர் செல்லும் இடங்களை , நோட்டமிட்ட அடையாளம் தெரியாத இரண்டு கொள்ளையர்கள் , செங்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள முனியப்பன் கோயில் அருகில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தை பார்த்து மர்ம நபர்கள் அவரிடம்  இருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு  ஓடிவிட்டனர்.  அங்கு இருந்தவர்கள் துரத்தியும் பிடிக்கமுடியவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


 




 


 அதனைத்தொடர்ந்து மனோகரன் செங்கம் காவல்நிலையத்தில்  புகார் அளித்தார். புகார் மனுவை பெற்ற, செங்கம் காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டனர். திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவுப்படி, செங்கம் உட்கோட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமரன் அவர்களின் மேற்ப்பார்வையில்,  செங்கம் காவல்துறையினர்  தனிப்படை அமைக்கப்பட்டு, மேற்படி சம்பவம் நடந்த இடத்திற்குச் சென்று அங்குள்ள கடைகளில் CCTV-காட்சிகளை ஆராய்ந்தும்  மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையத்தின் உதவியுடன் விசாரனை மேற்க்கொண்டு வந்தனர் 


இந்நிலையில் நிலையில், போலீசார்  செங்கம் அடுத்த மேல்புழுதியூர் பாலத்தின் கீழ் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது 2 நபர்கள் பைக்கில் வந்தனர். சந்தேகத்தின் பெயரில் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரண்பாடாக பதில் அளித்தனர். சந்தேகத்தின் பேரில் 2 நபர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர். விசாரணையில் மனோகரனிடம் வழிப்பறி செய்த கொள்ளையர்கள் சுப்பையா மகன் 
கோவிந்தராஜ் வயது (38) ,  பாபுவின் மகன் அங்கையா வயது (18)  , இவர்கள்  இருவரும் ஓஜி குப்பம், நகிரி வட்டம், சித்தூர் மாவட்டம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினருக்கு தெரியவந்தது. 




இவர்கள் இருவரும் அங்கு தங்கி இருப்பதாக, தனிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து விரைந்து சென்ற தனிப்படையினர் இருவரையும் சுற்றிவளைத்து  கைது செய்தனர், பின்னர் அவர்களிடமிருந்து ரூபாய் 3,00,000 லட்ச ரூபாய்  மற்றும் பதிவெண் இல்லாத ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, நீதிமன்ற  காவலுக்கு அனுப்பட்டனர். ஆந்திர கொள்ளையர்கள் தமிழகத்தில் களமிறங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.