கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி நிலமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான மாதா என்கிற மாதேஷ் (29). இவர் பக்கத்து தெருவில் வசிக்கும் சோனியா (25) என்பவரை நான்கு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாருக்கும் இவர்களுடைய காதல் விவகாரம் தெரிந்ததையடுத்து திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத்தொடர்ந்து இருவரும் தற்கொலைக்கு முயற்சித்த பின்னர் இரண்டு குடும்பத்தினரும் சம்மதித்து திருமணம் செய்து வைத்துள்ளனர்.


தற்போது மாதேஷ்-சோனியா தம்பதிகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றது. இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த மாதம் தனது கணவர் மாதேஷ் உடன் கோபித்துக்கொண்டு சோனியா அவருடைய அம்மா வீடான ஆசிரியர் காலனி பகுதிக்கு சென்றுள்ளார்.



 


திருவண்ணாமலையில் 1300 ஆண்டுகள் பழமையான லகுலீசர், பிள்ளையார் சிற்பங்கள் கண்டுபிடிப்பு...!


மனைவி வராத நிலையில் ஆட்டோ ஓட்டுநரான மாதேஷ் குடிபோதையில் மனைவியின் அண்ணனான பழக்கடை வியாபாரி விக்கி என்பவரை (31) தொலைபேசியில் தொடர்புக்கொண்டு மனைவியை அனுப்பி வைக்குமாறு கோபமாக ஆபாச வார்த்தைகளால் திட்டி சண்டை போட்டுள்ளார். 


இந்த நிலையில் சோனியாவின் அண்ணனான விக்கி, நிலமாரியம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் மாதேஷிடம் இந்த பிரச்சினை குறித்து பேச சென்றார். அப்போது மாதேஷுக்கும் விக்கிக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறி உள்ளது. அப்பகுதி மக்கள் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதன்பிறகு  போலிசார் வருவதற்குள்ளாக இந்த தகராறில் ஆத்திரமடைந்த மாதேஷ், தனது மனைவியின் அண்ணனான விக்கியை கத்தியால் குத்தி கொலை செய்தார். 




 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற          https://bit.ly/2TMX27X


அதன் பின்னர் வந்த காவல்துறையினர், இரத்த வெள்ளத்தில் மிதந்தவாறு இறந்து கிடந்த உடலை மீட்டு காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துனர் அதனைத்தொடர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்த மாதேசை காவல்துறையினர் கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 


மனைவி உடனான சண்டையில் மனைவியின் அண்ணனை கொலை செய்த விவகாரம் ஓசூரில் கடும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 


SBI Platinum Deposit Scheme: குறைந்த முதலீடு செய்தாலும் அதிக லாபம்: எஸ்பிஐ புதிய டெபாசிட் திட்டம் இது தான்!