மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள வளர்நகர், ராஜிவ்காந்தி பகுதியில் கடந்த 22- ஆம் தேதி உலகனேரியை சேர்ந்த பாலமுருகன் என்ற ட்ரோ பாலா கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பான வழக்கினை மாட்டுத்தாவணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர். இந்த கொலைக் குற்ற வழக்கில் தொடர்புடைய வினோத் குமார், மாரி, விஜயராகவன், சூர்யா, ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட 5 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவந்தனர்.
இதில் முதல் குற்றவாளியாக பல்வேறு குற்றசம்பவங்களில் தொடர்புடைய பிரபல ரௌடியான வண்டியூரைச் சேர்ந்த வினோத் என்பவரை கைது செய்து கொலை சம்பவம் நடைபெற்ற பகுதி மற்றும் பதுங்கியிருந்த பகுதி குறித்து அடையாளம் காட்டுவதற்காக அழைத்து சென்றுள்ளனர். மதுரை வண்டியூர் பகுதிக்கு வினோத்தை காவல்துறையினர் அழைத்துசென்று அடையாளம் காட்டியபோது திடிரென அங்கு பதுக்கிவைத்திருந்த அரிவாளால் முதல்நிலை காவலரை வெட்ட முயன்றுள்ளார்.
அப்போது அங்கு பணியில் இருந்த ஆய்வாளர் ரவுடி வினோத்தின் காலில் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்தார். இதனையடுத்து காயமடைந்த ரவுடி வினோத்தை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறையினரை வெட்ட முயன்ற ரவுடியை சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான விசாரணையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் இதற்காக சிறப்பு பயிற்சி பெற்ற காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட உள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மதுரை: முனியாண்டி கோவில் பிரியாணி திருவிழா - விடிய விடிய வரிசையில் நின்று பிரசாதத்தை வாங்கி சென்ற பக்தர்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்