சென்னை பரங்கிமலை ஏழு கிணறு பூந்தோட்டம் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் அனந்த ராமகிருஷ்ணன் இவரது மகள் அஷ்மிதா(18) இவர் அடையாறு பேட்ரிசியன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவரும் பரங்கிமலை கலைஞர் நகரை சேர்ந்த நவீன் (25) என்பவரும் நட்பாக நெருங்கி பழகி வந்ததாக கூறப்படுகிறது. அஸ்மிதாவை நவீன் ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும் தெரிகிறது.

 

பேசுவதை தவித்த மாணவி

 

இந்த நிலையில் நவீன் மற்றும் அஸ்மிதாவிற்கு கருத்து வேறுபாடு காரணமாக  அஸ்மிதா, நவீனுடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். ஆனால் நவீன் தொடர்ந்து அஸ்மிதாவுக்கு தொல்லை கொடுத்து வந்ததுள்ளார். இந்நிலையில், அஸ்மிதா வழக்கம்போல் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த நவீன், பரங்கிமலை ஏழுகிணறு பகுதியில் அஸ்மிதாவை வழிமறித்து அவரிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.

 

தயவுசெய்து போய்விடு நவீன்..

 

அஸ்மிதாவின் வீட்டு அருகில் அவரை வழிமறித்து, பேசியதால் பதறி அஸ்மிதா அங்கிருந்து செல்லுமாறு கேட்டுள்ளார்.  இங்கு நீ பிரச்சனை செய்தால் , எனக்கு அவமானமாக இருக்கும்,  எங்கள் வீட்டிற்கு தெரிந்தால் அது பெரிய பிரச்சனையாகும் என கெஞ்சி கதறி உள்ளார். அஸ்மிதா கெஞ்சி கொண்டிருக்கும்போதே திடீரென நவீன் எதிர்பாராத விதமாக,  தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அஸ்மிதாவின் கழுத்தை அறுத்துவிட்டு, மற்றும் உடலில் சில இடங்களில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினார்.

 

ரத்த வெள்ளத்தில் துடித்த மாணவி

 

இரண்டு மூன்று இடங்களில் வெட்டுக்காயம் அடைந்ததால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு அஸ்மிதா சம்பவ இடத்திலேயே மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஒடிவந்து அஸ்மிதாவை மீட்டு மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அஸ்மிதாவுக்கு , அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

 

கல்லூரி மாணவி ஒருவரை இளைஞர் கழுத்தறுத்த, தகவலறிந்த நந்தம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் நவீன் செல்போன் எண்ணை வைத்து டிராக் செய்து, அதே பகுதியில் சுற்றித்திரிந்த நவீனை போலீசார் பிடிக்க முயன்ற போது தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். போலீசார், அவரை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப் பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிக அளவில், இருந்தபோதே மாணவியை கத்தியால் குத்தி தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சினிமா பாணியில் நடந்த சேசிங்

 

சினிமா பானியில் போலீசார் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வரை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து கைது செய்துள்ளனர். அப்போது நவீன் கீழே விழுந்ததில் மயக்கம் அடைந்தார். உடனே போலீசார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர், என்பது குறிப்பிடத்தக்கது.