சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள்ளது தனியார் மருத்துவமனை. இந்த மருத்துவமனையின் உரிமையாளர் மருத்துவர் மோகன்குமார். இவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது மருத்துவமனைக்கு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார்.


காரைக்குடியில் துணிக்கடை வைத்துள்ள அந்த பெண் அடிக்கடி உடல்நலக்குறைவு என்று கூறி மருத்துவர் மோகன்குமாரிடம் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவரது கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த சூழலில், மருத்துவர் மோகன்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறிக்கொண்டு மருத்துவர் மோகன்குமார் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார்.




வீட்டில் இருந்த அந்த பெண்ணின் மகள் தாயின் செயலை கண்டு மனம் வேதனை அடைந்துள்ளார். மேலும், வெளிநாட்டில் உள்ள தனது தந்தையிடமும் விவரத்தை கூறியுள்ளார். இதையடுத்து, வெளிநாட்டில் உள்ள அந்த பெண்ணின் கணவன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனாலும், அந்த பெண்ணுக்கும் மருத்துவருக்கும் இடையேயான கள்ளத்தொடர்பு தொடர்ந்து கொண்டிருந்தது.


இந்த சூழலில், மருத்துவர் மோகன்குமார் தனியார் கல்லூரியில் படித்து வந்த அந்த 17 வயது மாணவிக்கும் கடந்த சில தினங்களாக பாலியல் தொல்லை அளித்து வந்துள்ளார். மாணவி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே மாணவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதையடுத்து, தனக்கு நேர்ந்த கொடுமைகளை மாணவி இணையதளம் மூலமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது தாய்க்கும், அந்த மருத்துவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு குறித்தும் தகவல் தெரிவித்துள்ளார்.





மாணவியின் புகாரைத் தொடர்ந்து, மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த எலும்பு முறிவு மருத்துவர் மோகன்குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மாணவியின் வீட்டிற்கு தொடர்ச்சியாக வந்து சென்றுகொண்டிருந்த மருத்துவர் மோகன்குமார் அவரது தாயார் இல்லாத நேரத்தில் மாணவியிடம் அத்துமீற அடிக்கடி முயற்சித்துள்ளார்.


இந்த சூழலில், மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி தனது காரில் மாணவி படிக்கும் கல்லூரிக்கு அழைத்துச் சென்று வந்துள்ளார். அப்போது, காரிலே மாணவியை வலுக்கட்டாயப்படுத்தி தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளார். ஆனால், மாணவி ஒத்துழைக்க மறுத்ததால் மருத்துவர் மோகன்குமார் மாணவியை மிகவும் கடுமையாக தாக்கியுள்ளார். இதனால், மனம் உடைந்து மாணவி காவல்துறையினருக்கு நடந்த அனைத்தையும் புகாராக பதிவு செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதால் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் படிக்க : "அடிக்கடி RTI ல தகவலா கேட்குற" : அடி ஆட்கள் வைத்து மிளகாய் பொடி தூவி தாக்குதல்.. சிசிடிவியால் சிக்கிய விகேபுரம் தலையாரி


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண