திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ரகுமான் காலனியை சேர்ந்தவர் ராஜன் உஷா தம்பதியினர்,  கட்டிட தொழிலாளியான ராஜன் தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த தம்பதியினர் தங்களது 2 குழந்தைகளோடு இருசக்கர வாகனத்தில் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பும்போது அம்பாசமுத்திரம் ராணி மகளிர் மேல்நிலைப் பள்ளியின் அருகில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பெட்ரோல் போட சென்றுள்ளனர். அப்போது அவர்களின் இரு சக்கர வாகனத்திற்கு முன்பாக கார் ஒன்று டீசல் நிரப்புவதற்காக நின்றுள்ளது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- மீனவர் சமுதாயத்திற்கு செல்லும் தூத்துக்குடி துணை மேயர் பொறுப்பு - ஜெனிட்டா VS நிர்மல்குமார்



காரின் ஓட்டுனர் சுந்தரம்  டீசல் நிரப்பிவிட்டு பின்னோக்கி காரை நகர்த்தி உள்ளார். குடும்பத்தோடு நின்ற ராஜனின் இருசக்கர வாகனத்தை கவனிக்காமல் கார் பின்னோக்கி நகர்த்திய போது இருசக்கர வாகனத்தில் சற்று வேகமாக கார் மோதி உள்ளது,  இதில் ராஜன் மற்றும் உஷா தங்கள் குழந்தைகளுடன் நிலை தடுமாறி  கீழே விழுந்தனர். அப்போது பின்னால் ஏதோ அசம்பாவிதம் நடப்பது உணர்ந்த காரின் ஓட்டுநர் பதட்டத்தில் காரின் பிரேக் பிடிப்பதற்கும் மீண்டும் ஆக்சிலேட்டரை மிதித்ததில் கார் பின்னோக்கி மீண்டும் வேகமாக நகர்ந்து அபர்ணா என்ற 4 வயது குழந்தையின் மீது ஏறியது. இதில் உடல் நசுங்கி தாய் தந்தையின் கண்முன்னே  பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.  தங்கள் கண்முன்னே பிள்ளை உயிரிழந்ததை கண்ட பெற்றோர் கதறி துடித்தனர், இதனை பார்த்த பலரும் கண்ணீர் கடலில் மூழ்கியதோடு இச்சம்பவம் அனைவரையும் கலங்க செய்தது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:-  கட்சி முடிவெடுத்தால் ஒற்றைத் தலைமையை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள் - கடம்பூர் ராஜூ பேட்டி



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அதிமுக கவுன்சிலர்களை திமுகவினர் கடத்த முயற்சி - அதிமுக மாவட்ட செயலாளர் ஆட்சியரிடம் புகார்


இந்த விபத்து தொடர்பாக தகவலறிந்த அம்பாசமுத்திரம் காவல்துறையினர் கார் ஓட்டுநர் சுந்தரத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சூழலில் அனைவரையும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியானது, சமூக வலை தலங்களில் வெளியான சிசிடிவி காட்சியில் ராஜன் பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு நிற்கும் காட்சிகளும் பின்னோக்கி வந்து கார் இடித்து தள்ளி குழந்தையுடன் டயருக்குள் சிக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது,  இதனை கண்ட பலரும் சொல்ல முடியாத சோகத்தையும், ஒன்றும் அறியா பச்சிளம் குழந்தையை இழந்து தவிக்கும் தம்பதியினருக்கு தங்களது ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- அதிமுக கவுன்சிலர்கள் 9 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு


 


Car loan Information:

Calculate Car Loan EMI